News March 31, 2025
விடுபட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை எப்போது?

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதாக Dy CM உதயநிதி சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார். இந்நிலையில், தகுதியுடைய பெண்களிடம் இருந்து 3 மாதத்தில் மனுக்கள் பெறப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மனுக்களை ஆராய்ந்து நிச்சயமாக ரூ.1,000 வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
Similar News
News January 17, 2026
ஜனவரி 17: வரலாற்றில் இன்று

*1706 – அமெரிக்க விஞ்ஞானி பெஞ்சமின் ஃபிராங்கிளின் பிறந்தார். *1773 – இங்கிலாந்து கப்பல் கேப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்க்டிக்காவை அடைந்தார். *1917 – தமிழக முன்னாள் CM எம்.ஜி. ஆர் பிறந்தார். *1942 – அமெரிக்க குத்து சண்டை வீரர் முகம்மது அலி பிறந்தார். *2010 – மேற்கு வங்கத்தின் முன்னாள் CM மற்றும் CPM கட்சியின் முக்கிய தலைவரான ஜோதி பாசு காலமானார்.
News January 17, 2026
இந்தியாவில் மோசமான சூழல்: டென்மார்க் வீராங்கனை

காற்று மாசுபாடு, மோசமான ஏற்பாடு ஆகிய காரணங்களால் டெல்லியில் நடக்கும் <<18857250>>இந்திய பேட்மிண்டன் ஓபனை<<>> சர்வதேச வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், டென்மார்க் வீராங்கனை மியா பிலிச்ஃபெல்ட், இந்தியாவில் எதிர்பார்த்ததை விட மிக மோசமான சூழலை எதிர்கொள்ள நேர்ந்ததாக அதிருப்தி தெரிவித்துள்ளார். ஒரு சர்வதேச போட்டிக்கு இதுபோன்ற மோசமான ஏற்பாடுகளை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றும் கூறியுள்ளார்.
News January 17, 2026
முகமது அலி பொன்மொழிகள்

*அடித்து வீழ்த்தப்பட்டால் நீங்கள் தோற்கமாட்டீர்கள். கீழேயே இருந்தால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள். *நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். *ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவர்கள், வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டார்கள். *நான் தான் வெல்லப் போகிறேன் என்ற மன உறுதியுடன் ஒருவன் இருக்கும் போது, அவனை வெல்வது கடினம். *என் வலுவான எதிராளி எப்பொழுதும் நான்தான்.


