News April 22, 2025
அடுத்த ஆஸ்கர் விருது விழா எப்போது?

98-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்தாண்டு மார்ச் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கான பரிந்துரைகள் ஜன.22ம் தேதி வெளியாகும். இந்த முறை ஆஸ்கர் விருதுக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி பரிந்துரைக்கப்படும் அனைத்து திரைப்படங்களையும் அகாடமி உறுப்பினர்கள் பார்த்து, இறுதி ஓட்டெடுப்புக்கு தேர்வு செய்ய வேண்டும்.
Similar News
News December 10, 2025
மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்கலாம் – தூத்துக்குடி ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், 2025–2026 ஆண்டிற்கான “மஞ்சப்பை விருதிற்கு” பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் தடையை முன்னெடுத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில், முதல் பரிசு ரூ.10 லட்சம், இரண்டாம் ரூ.5 லட்சம், மூன்றாம் ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
News December 10, 2025
விஜய் உடன் கூட்டணி.. அமைச்சர் அறிவித்தார்

புதுச்சேரியில் பரப்புரை செய்த விஜய், அங்கு ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பற்றி ஏதும் பேசாமல், அவர்களுடன் கூட்டணியில் உள்ள பாஜகவை மட்டுமே விமர்சித்திருந்தார். இதனால் தவெக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமையலாம் என அரசியல் களத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில், தவெகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி CM ரங்கசாமிக்கு தான் தெரியும் என்று புதுச்சேரி அமைச்சர் லஷ்மி நாராயணன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
மீண்டும் ரத்து செய்யப்படும் இண்டிகோ விமானங்கள்

இன்று, நாடு முழுவதும் சுமார் 200-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லி மற்றும் பெங்களூருவில் இருந்து மட்டும் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகியுள்ளது. கடுமையான நெருக்கடிக்குப் பிறகு, தங்களது விமான சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக நேற்று, இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் அறிவித்திருந்தார். இந்த சூழலில், விமான சேவைகள் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


