News October 25, 2024
‘வேட்டையன்’ OTT ரிலீஸ் எப்போது?

‘வேட்டையன்’ திரைப்படம் நவ.7ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹90 கோடிக்கு அமேசான் நிறுவனம் டிஜிட்டல் உரிமத்தை வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ₹300 கோடி பட்ஜெட்டில் உருவான ‘வேட்டையன்’, தியேட்டரில் வெளியான 15 நாள்களில் ₹141.5 கோடியை இந்தியாவில் வசூல் செய்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அக்.10ல் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
Similar News
News December 1, 2025
சென்னை: 10th PASS.. AIIMS-ல் வேலை ரெடி.! APPLY NOW

சென்னை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <
News December 1, 2025
ராஜ்யசபா புதிய உயரத்தை எட்டும்: தம்பிதுரை

ராஜ்யசபாவில் பேசிய அதிமுக MP தம்பிதுரை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார். மேலும், ‘உங்கள் தலைமைப்பண்பால் ராஜ்யசபா சிறந்த நாள்களை காணும் என நம்புகிறேன். அது, இந்தியாவை ஒரு புதிய உயரத்திற்கு அழைத்து செல்லும்’ என்று தெரிவித்தார். தொடர்ந்து, தமிழக பிரச்னைகளை பேச அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
News December 1, 2025
அண்ணாமலை கொடுக்கும் கல்யாண கிஃப்ட்டின் ரகசியம்?

அண்ணாமலை, தான் பங்கேற்கும் அனைத்து திருமணங்களிலும் ஒரே மாதிரியான கிஃப்ட்டை தான் கொடுக்கிறார். அது என்னவாக இருக்கும் என்றே பலரும் தேடி வருகின்றனர். திருமணம் மங்களகரமானது. இதனை வெளிப்படுத்தும் விதமாக, விவசாயிகளிடம் இருந்து மஞ்சளை நேரடியாக வாங்கி அதை பதப்படுத்தி, அரைத்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து பரிசளித்து வருகிறாராம். இந்த ஐடியாவும் நல்லா இருக்கே.. நாமளும் பாலோ பண்ணலாம்!


