News February 28, 2025

ஆசிய கோப்பை எப்போது? எங்கே?

image

17ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 ஃபார்மேட்டில் வரும் செப்டம்பரில் தொடங்க உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆசிய கோப்பை 2025-ஐ நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ள போதிலும், இந்தப் தொடர் UAE-இல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. அதனால், IND vs PAK போட்டிகள் அங்கேயே நடைபெறும் எனக் கூறப்படுகிறது. 2026 T20 WCக்கு தயாராகும் வகையில் இந்த தொடர் நடைபெற உள்ளது.

Similar News

News February 28, 2025

காவல்துறை சம்மன்.. நேரம் குறித்த சீமான்

image

நடிகையின் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் இன்று மாலை 6 மணிக்கு வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராவதாக சீமான் தெரிவித்துள்ளார். தருமபுரியில் பேசிய அவர், வீட்டில் ஆட்கள் இல்லாதது போல் சம்மனை சுவற்றில் ஒட்டியது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். சீமானின் இந்த பேட்டியைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு வளசரவாக்கத்தில் திரள நாம் தமிழர் பலரும் சோஷியல் மீடியாவில் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

News February 28, 2025

இன்னும் மே மாதமே வரல… அதுக்குள்ள பொளக்கும் வெயில்!

image

நாட்டின் பல இடங்களிலும் இப்போதே வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. கடந்த செவ்வாய், டெல்லியில் 32.4 °C, மும்பையில் 38.7 °C வெயில் கொளுத்தியுள்ளது. அந்நகரங்களில் இந்த ஆண்டின் அதிகபட்ச வெயில் இதுவே. சென்னையில் 29.05 °C அடித்துள்ளது. நாட்டில் குளிர்காலம் குறைந்து சம்மர் சீசன் நீளும் காலநிலை மாற்றத்தையே இது குறிப்பதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள். இப்பவே இப்படினா மே மாசம் எப்படி இருக்க போகிறதோ?

News February 28, 2025

சோஷியல் மீடியாக்களுக்கு AI APPஐ உருவாக்கும் மெட்டா

image

இன்ஸ்டா, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சேவைகளுக்காக பிரத்யேக AI APPஐ மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. OpenAI, மைக்ரோசாஃப்ட், அமேசான், கூகுள் நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த ஆண்டுக்குள் APPஐ அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாம். இது குறித்து Xஇல் கருத்து தெரிவித்துள்ள OpenAI CEO சாம் ஆல்ட்மேன், நாங்களும் ஒரு சோஷியல் ஆப்பை உருவாக்குவோம் என கூறியுள்ளார்.

error: Content is protected !!