News September 13, 2024
ஓய்வு எப்போது?.. Thug Life செய்த சாவ்லா..!

தோனி முதலில் ஓய்வு பெறுவாரா.. நீங்களா? என பியூஷ் சாவ்லாவிடம் (35) கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிரித்துக்கொண்டே தோனி (43) என கூறிய அவர், சச்சினுடனும் விளையாடினேன், தற்போது அவரது மகனுடனும் விளையாடுகிறேன் என தெரிவித்தார். மேலும், தொகுப்பாளரை பார்த்து, உங்களுடனும் விளையாடுவேன், உங்கள் மகனுடனும் விளையாடிவிட்டு தான் ஓய்வு பெறுவேன் என Thug Life சம்பவம் செய்தார்.
Similar News
News December 9, 2025
‘வந்தே மாதரம்’ இஸ்லாமுக்கு எதிரானது அல்ல: ராஜ்நாத் சிங்

‘வந்தே மாதரம்’ மற்றும் அப்பாடலை கொண்டுள்ள ‘ஆனந்த் மடம்’ நாவல், இஸ்லாம் மதத்திற்கு எதிரானது அல்ல என ராஜ்நாத் சித் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ஆங்கிலேய அழுத்தத்தின் கீழ் அன்றைய வங்காள நவாப் மக்களை சுரண்டினார். மக்களின் வலியையே அந்த நாவல் பிரதிபலித்தது. ஆனால், சுதந்திரத்திற்கு பிறகு அது அரசால் குறிவைக்கப்பட்டு, வந்தே மாதரத்தின் ஆன்மா நீக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
News December 9, 2025
பணக்காரர் வன்கொடுமை செய்தால் குற்றமற்றவரா?

<<18502901>>நடிகை பலாத்கார வழக்கில்<<>> கேரள அரசின் செயல்பாட்டை பாடகி சின்மயி வரவேற்றுள்ளார். குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களை ஜாமினில் வெளியேற்ற முயற்சிப்பதற்கு பதிலாக கேரள அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது பாராட்டத்தக்கது. ஒருவர் பணக்காரராக இருந்தால், தனக்கு பிடிக்காத பெண்ணை, அடியாட்களை அனுப்பி வன்கொடுமை செய்துவிட்டு, குற்றமற்றவர் என நீதி வாங்கி விட முடிவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 9, கார்த்திகை 23 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 7.30 PM – 8.30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.


