News August 18, 2024
மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் எப்போது? EC விளக்கம்

ஜம்மு-காஷ்மீர், ஹரியானா தேர்தல் முடிவுகள் அக்.4இல் வந்தபிறகே மகாராஷ்டிர தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுமென EC தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர சட்டசபை பதவிக்காலம் நவ. 26 முடிவடைவதால், அதற்கு தேர்தல் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் ஹரியானா, JK சட்டசபைகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து EC விளக்கம் அளிக்கையில், அக்.4க்கு பிறகே அறிவிக்கப்படும் எனக் கூறியது.
Similar News
News November 23, 2025
பள்ளிக்கு அருகே கிடைத்த 20 கிலோ வெடிபொருள்கள்

உத்தராகண்டின் அல்மோரா பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே 20 கிலோ வெடி மருந்துகள் கிடைத்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. முன்னதாக ஹரியானாவில் வெடிபொருள்கள் சிக்கிய அடுத்த சில மணி நேரத்தில் டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்நிலையில், உத்தராகண்டில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 23, 2025
நடிகர் அஜித்துக்கு சிறந்த ஜென்டில்மேன் டிரைவர் விருது!

நடிகரும், ரேஸருமான அஜித்குமாருக்கு, இத்தாலியில் ‘Gentleman Driver of the Year 2025’ விருது வழங்கப்பட்டுள்ளது. ஃபிரான்ஸ் ரேஸர் பிலிப் சாரியோல் நினைவாக, சர்வதேச ரேஸிங் நிறுவனமான SRO Motorsports Group, இந்த விருதை வழங்கியுள்ளது. நடிப்பை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, ரேஸிங்கில் கவனம் செலுத்தி வரும் அஜித்குமாருக்கு இந்த விருது பெரும் ஊக்கமாக அமையும் என அவரது ரசிகர்கள், இதை கொண்டாடி வருகின்றனர்.
News November 23, 2025
BREAKING: புயல் உருவாகிறது.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும் என்று IMD அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. நேற்று காலை உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலுக்கு UAE பரிந்துரைத்த ‘சென்யார்’ என்ற பெயர் சூட்டப்படவுள்ளது.


