News August 26, 2024
‘வாழை’ ஓடிடி ரிலீஸ் எப்போது?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ஆம் தேதி வெளியான ‘வாழை’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பலதரப்பினரிடமும் பாராட்டை பெற்றுள்ள இப்படம் செப்டம்பர் இறுதியில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நீங்கள் இப்படத்தை பார்த்துவிட்டீர்களா?
Similar News
News December 6, 2025
BREAKING: அதிமுகவில் இணைந்தார்

அமமுகவில் இருந்து அடுத்தடுத்து பல நிர்வாகிகள் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் R.சுரேஷ், அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். முன்னதாக அமமுகவினர் அதிமுகவில் இணைந்து வருவது குறித்து பேசிய டிடிவி தினகரன், விசுவாசம் இல்லாதவர்கள் கட்சி மாறி வருவதாக சாடியிருந்தார்.
News December 6, 2025
இதுதான் அம்பேத்கரின் வெற்றி: CM ஸ்டாலின்

கல்வியால் அனைத்து ஒடுக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்க கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிப்பதாக கூறிய அவர், இதுதான் அம்பேத்கரின் வெற்றி எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அவரது வாழ்க்கையே ஒரு பாடம் எனவும், அந்த பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
News December 6, 2025
திருப்பரங்குன்றம் விவகாரம்: விரைவில் விஜய் அறிக்கை?

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய்யின் மெளனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில், ‘ஜோசப் விஜய்’ என்ற அடையாளத்தை வைத்து ஏற்கெனவே பாஜக, விஜய்யை விமர்சிப்பதால், இரு மதங்கள் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் ஏதும் பேச வேண்டாம் என விஜய் எண்ணுவதாக தவெகவினர் கூறுகின்றனர். கோர்ட்டில் இவ்வழக்கு செல்வதை பொறுத்து, விஜய் விரைவில் விரிவான அறிக்கையை வெளியிடுவார் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


