News April 6, 2025

பிரியாணி எப்போது பிரச்னை கொடுக்கும்?

image

அனைத்து சத்துகளையும், நாவூறும் சுவையையும், இழுக்கும் மணமும் கொண்டது பிரியாணி. அதேநேரம், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். டால்டா, எண்ணெய், கொழுப்பு அதிகமுள்ள இறைச்சி ஆகியவை சேர்க்கப்பட்ட பிரியாணியை அளவுக்கு மேல் சாப்பிடக் கூடாது. அதிக உப்பு, செயற்கை சுவை/ நிறமூட்டிகளை தவிர்க்கவும். உணவகங்களில் பழைய இறைச்சி பயன்படுத்தப்படுவதால், வீட்டில் சமைத்து சாப்பிடுவதே நல்லது.

Similar News

News December 17, 2025

தருமபுரி: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

image

தருமபுரி மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 17, 2025

டிரம்ப் அதிரடி: மேலும் 7 நாடுகளுக்கு சிக்கல்

image

USA-வில் நுழைய ஏற்கெனவே <<18410987>>12 நாடுகளை<<>> சேர்ந்தவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 7 நாடுகளுக்கு தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சிரியாவில் 3 அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிரியா, மாலி, தெற்கு சூடான் உள்ளிட்ட 7 நாடுகளை சேர்த்து மொத்தம் 19 நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீன பாஸ்போர்ட் கொண்டவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News December 17, 2025

தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹12,400-க்கும், சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹99,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!