News August 20, 2025
WhatsApp யூஸர்கள் இத உடனே பண்ணுங்க..

டேட்டா திருட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், WhatsApp பயனர்கள், இந்த பாதுகாப்பு அம்சங்களை உடனே ஆன் செய்து வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
◆WhatsApp-ல் Settings-> Chats-> Backup-ல் ‘End-To-End Encryption’-ஐ ஆன் செய்யவும்
◆Personal Chat-களுக்கு ‘Chat Lock’-ஐ ஆன் செய்யவும்.
◆Settings-> Account-> Two-step verification-ஐ ஆன் செய்யவும். இது வேறு Device-ல் Login செய்யும் போது, OTP கேட்கும்.
Similar News
News January 17, 2026
ஸ்ரீவி.யில் விஷம் குடித்து இளைஞர் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்துார் பகுதியில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த சமரசர்தார் (26) என்பவர் தனியார் மில்லில் பார்த்து வந்துள்ளார். பெற்றோர் இல்லாத இவர், மதுவுக்கு அடிமையாகி மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜன.12ல் விஷம் குடித்த இவரை அங்குள்ளவர்கள் மீட்டு விருதுநகர் G.H-ல் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 17, 2026
ஆட்சியில் பங்கு கேட்டாரா ராகுல் காந்தி?

நீலகிரிக்கு வந்திருந்த ராகுல் காந்தி காங்., கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுடன் மீட்டிங் நடத்தியிருந்தார். இதில் நிர்வாகிகள் தரப்பில் ஆட்சியில் பங்கும், 3 அமைச்சர்கள் பதவியும், அதிக தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என்ற் கோரிக்கைகள் வலுத்ததாம். இதற்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவிக்கவில்லை என உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ராகுலும் அதே முடிவில்தான் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News January 17, 2026
‘ஜன நாயகன்’ பட ரிலீஸ்.. புதிய அப்டேட் வந்தது

விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்பட சென்சார் விவகாரத்தில் ஜன.20-ம் தேதி <<18862962>>ஐகோர்ட் <<>>முடிவெடுக்க SC உத்தரவிட்டது. ஒருவேளை அன்று சென்சார் கொடுக்க உத்தரவிட்டால், குடியரசுத் தினத்தையொட்டி ஜன.24-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஜன.24 முதல் 26 வரை தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை வருகிறது; இதை பயன்படுத்திக்கொள்ள படக்குழு இம்முடிவை எடுத்துள்ளதாம்.


