News April 12, 2025

வாட்ஸ்ஆப் வேலை செய்யவில்லை?

image

இன்று மாலை முதல் வாட்ஸ்ஆப்பில் மெசேஜ்கள் அனுப்ப முடியவில்லை என சோஷியல் மீடியாவில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஸ்டேட்டஸ் / ஸ்டோரி அப்டேட் பண்ண முடியவில்லை, வாட்ஸ்ஆப் உள்ளே போகவே முடியவில்லை, வாட்ஸ்ஆப் குரூப் வேலை செய்யவில்லை என்றெல்லாம் புகார் எழுந்துள்ளது. வாட்ஸ்ஆப் தரப்பில் விளக்கம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. உங்களுக்கு வாட்ஸ்ஆப் வேலை செய்கிறதா? கமென்ட்டில் சொல்லுங்கள்.

Similar News

News February 2, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 599 ▶குறள்: பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
▶பொருள்: யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.

News February 2, 2026

மத்திய பட்ஜெட்டில் இதற்கு ₹10,000 கோடி

image

இந்தியாவை ஓர் உலகளாவிய உயிர்காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்யும் மையமாக மேம்படுத்த ‘பயோ ஃபார்மா சக்தி’ திட்டத்தை FM நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் முன்மொழிந்தார். இத்திட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளில் ₹10,000 கோடி நிதி ஒதுக்கப்படும். இதன் மூலம், விலை உயர்ந்த மருந்துகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதுடன், அவை பொதுமக்களுக்கு குறைந்த விலையிலேயே கிடைக்க வழிவகை செய்யப்படும்.

News February 2, 2026

ஜிஎஸ்டி வசூல் ₹1.93 லட்சம் கோடி

image

கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி ₹1.93 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2025 ஆண்டு ஜனவரி மாதம் ₹1.84 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் இந்தாண்டு 6.2% அதிகரித்துள்ளது. இதில் உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் ₹1.41 லட்சம் கோடி என்றும், தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் 5% உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!