News August 4, 2024
இந்த போன்களில் இனி WhatsApp வேலை செய்யாது

ஆண்ட்ராய்டு 4, IOS 11, KAI OS 2.4 வெர்சன் மற்றும் பழைய வெர்சன் மொபைல்களில் WhatsApp சேவைகள் நிறுத்தப்படுகிறது. ஆப்பிள், சாம்சங், ஹூவாய் மற்றும் மோட்டோரோலா நிறுவனங்களைச் சேர்ந்த 35 போன்கள் இந்தப் பட்டியலில் உள்ளன. சாம்சங் கேலக்சி S Plus, Core, எக்ஸ்பிரஸ் 2, iPhone 5, 6, 6S Plus, 6S, SE, Huawei C199, Huawei GX1s, Y625, Ascend P6 S, Ascend G525 உள்ளிட்ட போன்களில் இனி WhatsApp இயங்காது.
Similar News
News January 18, 2026
வாக்குகளுக்காக நிலத்தை தாரைவார்த்த காங்கிரஸ்: PM

காங்., ஆட்சியில் பல தசாப்தங்களாக ஊடுருவல் அதிகரித்து வந்ததாக PM மோடி விமர்சித்தார். அசாமில் ₹6,957 கோடியிலான காசிரங்கா உயர்மட்ட பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் பேசிய அவர், காங்., வாக்கு வங்கி அரசியலுக்காக அசாம் மாநிலத்தின் நிலத்தை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்ததாக குற்றஞ்சாட்டினார். ஊடுருவல்காரர்களை வெளியேற்றி, அசாமின் அடையாளத்தை பாஜக பாதுகாத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News January 18, 2026
ஆம்னி பஸ் டிக்கெட் விலை ₹6,000 வரை உயர்ந்தது

பொங்கல் விடுமுறை முடிந்து பலரும் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஆம்னி பஸ்களின் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களின் பர்ஸை பதம் பார்த்துள்ளது. டிக்கெட் கட்டணம் சாதாரண நாள்களை விட 3 மடங்கு உயர்ந்திருப்பது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, மதுரை – சென்னைக்கு ₹6,000 வரை வசூலிக்கப்படுகிறது. இதனை அரசு தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
News January 18, 2026
இன்று மாலை மீண்டும் டெல்லி விரையும் விஜய்

சிபிஐ விசாரணைக்காக இன்று மாலை விஜய் டெல்லி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 2-வது முறையாக CBI முன் விஜய் நாளை ஆஜராக உள்ளார். ஏற்கெனவே கடந்த திங்கட்கிழமை 7 மணி நேரத்துக்கு மேல் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. நாளை மீண்டும் விஜய்யிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது.


