News April 26, 2025
வாட்சப் புது அப்டேட்.. இனிமேல் அதை பண்ண முடியாது!

வாட்சப்பில் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் கொண்டுவந்துள்ளது. ADVANCED CHAT PRIVACY அம்சம் மூலம் நாம் அனுப்பும் குறுஞ்செய்தி, புகைப்படங்களை பார்க்க மட்டுமே முடியும். பகிர முடியாது. தனிநபர், குழு உரையாடல் இரண்டிலும் இந்த அம்சம் வேலை செய்யும். பீட்டா வெர்ஷனில் அறிமுகமாகியுள்ள இது, விரைவில் அனைவருக்கும் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருமை..!
Similar News
News April 26, 2025
கல்வியை மட்டும் கைவிடக்கூடாது: CM ஸ்டாலின்

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு CM ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அவர் ‘நான் முதல்வன்’ பயன் அளித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். கல்வி தான் நமது ஆயுதம், எந்த இடர் வந்தாலும் கல்வியை கைவிடக் கூடாது எனவும் CM அறிவுறுத்தினார். மேலும் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எப்போதும் தனி மரியாதை உள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
News April 26, 2025
ஹாலிவுட் பிரபலம் அம்பர் கெல்லெஹெர் காலமானார்!

ஹாலிவுட்டில் பிரபலமாக இருந்த நடிகை அம்பர் கெல்லெஹெர்(56) காலமானார். இவர் சினைப்பை புற்றுநோயால் காலமானதாக தகவல் வெளிவந்துள்ளன. பிரபல சின்னத்திரை தொடர்களான Baywatch, Wings போன்றவற்றில் நடித்துள்ள இவர், அமெரிக்காவின் மிகப்பெரிய மேட்ரிமோனி நிறுவனமான Kelleher International-ன் CEO ஆவார். நம்மூர் கல்யாணமாலை போன்று நிகழ்ச்சிகளையும் ஹாலிவுட்டில் இவர் நடத்தி இருக்கிறார்.#RIP.
News April 26, 2025
கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு பேரவையில் அஞ்சலி

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு சட்டப்பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். உடல்நலக் குறைவால் அவதியடைந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி தனது 84 வயதில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு CM ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.