News February 12, 2025
கூகுள் மெசேஜஸ் செயலியில் இருந்து வாட்ஸ்அப் கால்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739319583703_785-normal-WIFI.webp)
கூகுள் மெசேஜஸ் செயலியில் இருந்து நேரடியாக வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் அம்சம் விரைவில் வரவுள்ளது. தற்போது இந்த ஆப் மூலம் கூகுள் மீட் வீடியோ கால்களை மட்டுமே செய்ய முடியும். இதன் பயன்பாடுகளை மாற்றுவதற்கு பதிலாக, பயனர்களுக்கு மிகவும் வசதியாக இந்த புதிய அம்சத்தை கூகுள் கொண்டு வருகிறது. வாட்ஸ்அப்-ஐ போனில் இன்ஸ்டால் செய்தால் மட்டுமே இந்த வசதி செயல்படும்.
Similar News
News February 12, 2025
IT ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த Open AI
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739328478366_1173-normal-WIFI.webp)
Open AI புதிதாக ஏஐ ஏஜெண்ட்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார். இந்த ஏஜெண்ட்கள், பல வருட அனுபவங்களை கொண்ட சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் செய்யும் பணிகளை செய்யக்கூடிய திறன் கொண்டவையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், மனித சாஃப்ட்வேர் இன்ஜினியர்களின் மேற்பார்வை தேவைப்படும் கட்டமைப்பாகவே இவை தற்போது இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News February 12, 2025
CHAMPIONS TROPHYயில் இருந்து ஸ்டார்க் விலகல்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739326890360_55-normal-WIFI.webp)
சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விலகுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்களை வீழ்த்தி, எதிர் அணியினருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த அவர், தனிப்பட்ட காரணங்களாக விளையாடவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பேட்டிங் தரவரிசையில் வலுவாக இருக்கும் ஆஸி., அணிக்கு, பந்துவீச்சில் அவர் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
News February 12, 2025
புதிய அணிகளால் சர்ச்சையில் விஜய்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739328679845_55-normal-WIFI.webp)
TVKவில் உருவாக்கப்பட்ட புதிய அணிகளால் விஜய் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். திருநர் என்ற அணி ‘9’-வது இடத்தில் இருந்தது சர்ச்சையான நிலையில், தற்போது குழந்தைகள் அணி தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. தேர்தல் விதிமுறைகளின் படி சிறுவர்களை பரப்புரை போன்றவற்றில் ஈடுபடுத்தக்கூடாது. அப்படி இருக்கையில் எந்த அடிப்படையில் குழந்தைகள் அணி உருவாக்கப்பட்டது. அதன் செயல்பாடுகள் என்ன? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.