News January 21, 2026
WhatsApp-ல் வரும் புது அசத்தல் அப்டேட்!

WhatsApp பயனர்களுக்கு புதிய வசதி ஒன்றை வழங்க உள்ளது. மொபைல் WhatsApp-ல் செய்த ஆடியோ & வீடியோ அழைப்புகளை இனி WhatsApp Web மூலமும் மேற்கொள்ளலாம். Group Call மூலம், 32 பேருடன் ஒரே நேரத்தில் பேச முடியுமாம். இதற்காக, WhatsApp-ஐ கம்ப்யூட்டரில் Install செய்ய தேவையில்லை என்றும் Web Browser-லியே பயன்படுத்த எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஓரிரு வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
Similar News
News February 2, 2026
சீனா ஆக்கிரமிப்பை பற்றி பேச ராகுலுக்கு அனுமதி மறுப்பு!

இந்தியாவின் பெரும் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக ராகுல் காந்தி பார்லிமெண்ட்டில் குற்றஞ்சாட்டினார். ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி MM நரவனேவின் சுயசரிதை புத்தகத்தை மேற்கோள்காட்டி ராகுல் பேச, வெளியிடப்படாத புத்தகத்தை அடிப்படையாக கொண்டு பேசக் கூடாதென சபாநாயகர் அனுமதி மறுத்தார். அத்துடன் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
News February 2, 2026
டிகிரி போதும்.. ₹48,480 சம்பளம்.. இன்றே கடைசி

யூகோ வங்கியில் 173 Generalist and Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA முடித்திருக்க வேண்டும் *20- 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் *எழுத்துத் தேர்வு, குழு விவாதம் & நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும் *₹48,480 – ₹93,960 வரை சம்பளம் *விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். *விண்ணப்பிக்க <
News February 2, 2026
விவாகரத்து செய்தால் ₹27 கோடியா?

கணவரை விவாகரத்து செய்துவிட்டு வந்தால் ₹27 கோடி தருவதாக, தனது அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணிடம் US-ஐ சேர்ந்த CEO தமீர் போலெக் டீல் பேசியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி விவாகரத்து செய்த அப்பெண்ணுக்கு சொன்ன தொகையுடன், ₹13 கோடி மதிப்பிலான வீட்டையும் போலெக் வழங்கியுள்ளாராம். உலகம் முழுவதும் இந்த சம்பவம் பேசுபொருளான நிலையில், பணம் பத்தும் செய்யும் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


