News December 21, 2025

WhatsApp யூசர்களுக்கு புது ஆபத்து!

image

‘இந்த போட்டோ பாருங்க’ என நண்பர்களிடமிருந்து லிங்க் வந்தாலும் கூட உடனே கிளிக் செய்யாதீர்! அது உங்கள் கணக்கை முடக்கும் ‘GhostPairing’ மோசடியாக இருக்கலாம் என CERT-In எச்சரித்துள்ளது. போலி லிங்க் மூலம் போன் நம்பரை எடுக்கும் ஹேக்கர்கள், Device Linking வசதி மூலம் பாஸ்வேர்டு இல்லாமலேயே WhatsApp-ஐ கணினியுடன் இணைத்து தரவுகளை எடுப்பதால், Device Linking-ஐ அடிக்கடி சரிபார்க்க CERT-In அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News December 21, 2025

மெகா வெற்றியை நோக்கி முன்னேறும் பாஜக கூட்டணி

image

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மெகா வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 246 நகராட்சி மற்றும் 42 நகர பஞ்சாயத்துகளுக்கான தேர்தலில் மகாயுதி 214, காங்., தலைமையிலான மகா விகாஸ் அகாடி 52 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. அடுத்த மாதம் பிரஹன் மும்பை மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

News December 21, 2025

₹67.09 லட்சம் கோடி சொத்துடன் வரலாறு படைத்த மஸ்க்!

image

உலக வரலாற்றில் $700 பில்லியன் நிகர சொத்து மதிப்பை கடந்த முதல் நபர் என்ற சாதனையை எலான் மஸ்க் படைத்துள்ளார். டெஸ்லா நிறுவனம் மீதான வழக்கில், டெலாவேர் சுப்ரீம் கோர்ட் அவருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியதால், சொத்து மதிப்பு $749 பில்லியனாக (₹67.09 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் 2-வது வாரத்தில் $600 பில்லியனாக இருந்த சொத்து மதிப்பு ஒரே வாரத்தில், $700 பில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

News December 21, 2025

செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி.. களமிறங்கும் KK செல்வம்

image

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு எதிராக அவரது அண்ணன் மகன் KK செல்வத்தை வைத்து EPS காய் நகர்த்தி வருகிறாராம். கோபி தொகுதியில் செங்கோட்டையனை தோற்கடிக்க வேண்டும் என அவருக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோபியில் அதிமுக சார்பில் போட்டியிட KK செல்வம் விருப்ப மனு அளித்துள்ளார். சொந்த அண்ணன் மகனே தனக்கு எதிராக நிற்பது செங்கோட்டையனுக்கு தலைவலியாக மாறியிருக்கிறதாம்.

error: Content is protected !!