News January 25, 2026
WhatsApp மூலம் கேஸ் புக்கிங்.. இதை செய்யுங்க

வீட்டில் கேஸ் தீர்ந்து விட்டால், WhatsApp மூலமும் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அது எப்படி என தெரிந்து கொள்ளலாம். HP நிறுவனம் எனில், நீங்கள் அந்நிறுவனத்திடம் கொடுத்த செல்போன் எண்ணில் இருந்து, 92222 01122 என்ற எண்ணுக்கு Hi என மெசேஜ் அனுப்ப வேண்டும். அதுபோல, Indane எனில் 75888 88824 எண்ணுக்கும், Bharat Gas எனில் 1800224344 எண்ணுக்கும் மெசேஜ் அனுப்பி கேஸ் முன்பதிவு செய்யலாம். SHARE IT.
Similar News
News February 10, 2026
தம்பதியரே, உங்கள் உறவில் விரிசலா?

தம்பதியர் உறவில் விரிசல் தொடங்கி விட்டதை உணர்த்தும் அறிகுறிகள்: *நெகடிவாகவே தொடங்கும் பேச்சு *பிரச்னைகளை கவனிக்காதது போல் இருத்தல் *சண்டை போடுவதை திடீரென நிறுத்தி சைலன்ட் ஆவது (அ) சாதாரண சண்டைகூட பெரிதாக மாறுவது *காதல் வந்த ஆரம்பக் காலத்தை மறத்தல் *எப்போதும் மோசமானதையே நினைப்பது *எப்போதும், எதிலும் குறை சொல்லுதல் *விலகிவிட்ட உணர்வு, ஏக்கம் *துணைவர் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை கற்பனை செய்தல்.
News February 10, 2026
T20 WC: கனடாவை சாய்த்த தென்னாப்பிரிக்கா

டி20 WC-ல் 57 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஏய்டன் மார்க்ரம்(59), டேவிட் மில்லர்(39), ஸ்டப்ஸ்(34), ஆகியோர் அதிரடியாக விளையாட தெ.ஆப்., 213 ரன்களை குவித்தது. தொடர்ந்து விளையாடிய கனடாவில் நவ்நீத்(64) அரைசதம் அடித்தாலும் மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்களை மட்டும் எடுத்து கனடா தோல்வியை தழுவியது.
News February 10, 2026
E-Pantry.. ரயில் பயணிகளுக்கு சூப்பர் செய்தி

IRCTC இப்போது ரயில் பயணிகளுக்காக E-Pantry என்ற ஆன்லைன் உணவு முன்பதிவு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை முதலில் 25 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்திலோ அல்லது அதற்கு பின்னரோ ஆன்லைனில் உணவு மற்றும் தண்ணீரை ஆர்டர் செய்யலாம். பயணத்தின்போது அவர்களுக்கு இருக்கைக்கு வந்தே உணவு வழங்கப்படும்.


