News November 5, 2025
Whatsapp கொடுக்கும் சூப்பர் அப்டேட்!

தனது பயனர்களை தொடர்ந்து தக்கவைத்து கொள்ள, Whatsapp அடுத்தடுத்த அதிரடி அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில்தான், தற்போது Username வசதியை Whatsapp உருவாக்கிக் வருகிறது. இதன் மூலம், Whatsapp-ல் இனி Voice/ Video Call-கள், Message-களை போன் நம்பரை பகிராமலே செய்யலாம் என கூறப்படுகிறது. Beta பரிசோதனையில் இருக்கும் இந்த வசதி, கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Similar News
News November 5, 2025
மொத்தமாக அரிசிக்கு ‘NO’ சொல்றீங்களா? உஷார்

டயட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் அரிசியை ஒதுக்கி விடுவார்கள். ஆனால், அப்படி செய்வது உடலுக்கு தீங்கானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எலும்பு, தசை, மூட்டுகள் சரியாக வேலை செய்ய, உடலுக்கு Glycogen அவசியம். இந்த Glycogen, கார்போஹைட்ரேட்டில் இருந்து தான் கிடைக்கிறது. எளிதில் செரிமானமாகும், கார்போஹைட்ரேட்டை கொடுக்கும் அரிசியை ஒதுக்குவதால், பல பிரச்னைகள் வரலாம். எனவே, கொஞ்சம் அரிசியை சாப்பிடுங்க.
News November 5, 2025
நடிகை கனகாவுக்கு நடந்த துயரம்.. ராமராஜன் உருக்கம்

1990 களில் பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை கனகா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன போட்டோ இணையத்தில் வெளியானது. அதன் பின்னர், நடிகர் ராமராஜன் அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கனகா தனது தாயார் நடிகை தேவிகா மரணத்திற்கு பிறகு மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், பழைய நினைவுகளை மறந்துவிட்டதாகவும் உருக்கமாக கூறியுள்ளார். மீண்டு வாருங்கள் கனகா என ரசிகர்கள் ஆறுதல் கூறுகின்றனர்.
News November 5, 2025
நல்ல ரோடு போட்டால், நிறைய விபத்து நடக்கும்: BJP MP

சாலைகள் நன்றாக போடப்பட்டிருந்தால், வாகனங்கள் வேகமாக செல்லும். அதன் காரணமாகவே விபத்துக்கள் அதிகரிக்கும் என BJP MP கொண்டா விஸ்வேஸ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார். ஸ்ரீகாகுளத்தில் நிகழ்ந்த பஸ் விபத்து குறித்து பேசிய அவர், நெடுஞ்சாலைகள் பெரிய வளைவுகளின்றி, ஒரே நேர்கோட்டில் இருக்கும் வகையில் அமைக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார். இவரின் கருத்தை குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?


