News April 18, 2025
என்னய்யா நடக்குது அங்க…!

அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலிய பிரதமர் மெலோனியை புகழ்ந்து தள்ளியது உலக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. வரி விதிப்புக்குப் பின் அமெரிக்கா சென்ற மெலோனி டிரம்ப்பை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மெலோனியை தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியதுடன், இத்தாலியின் சிறந்த பிரதமர் என அடுக்கடுக்காக பாராட்டினார்.
Similar News
News November 23, 2025
சென்னையில் நாணயங்களை விழுங்கிய 110 குழந்தைகள்

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் நடப்பாண்டில் நாணயங்களை விழுங்கிய 110 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 3 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு பட்டன், பேட்டரி போன்ற சிறிய பொருள்கள் விளையாட வழங்கக் கூடாது. அவை எளி–தில் சுவாசப் பாதைக்குள் சிக்கிக் கொள்ளக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
திமுகவின் சிறப்பு திட்டங்களால் வெற்றி உறுதி: வைகோ

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு சிறப்பு திட்டங்களை அனைத்து மாநிலங்களும் பின்பற்றி வருவதாக வைகோ தெரிவித்துள்ளார். மக்களுக்கான எண்ணற்ற நலத்திட்டங்களை அரசு செய்து வருகிறது என்பதை நிச்சயம் மக்கள் புரிந்துக் கொள்வார்கள். இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றிபெறும் என்றும் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
News November 23, 2025
கருவுறாமை பிரச்னையா? இதோ அற்புத மூலிகை!

சதாவரி மூலிகை ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க உதவுவதாக சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த வேரின் சாறை காலை, மதியம், மாலை என 4 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை கலந்து குடிக்கலாம். இதனை தொடர்ந்து 5 நாள்களுக்கு செய்துவர மாதவிடாய் பிரச்னைகள், மன அழுத்தம், கருவுறாமை, செரிமான கோளாறு கூட சரியாகும் என்கின்றனர். இந்த அற்புதத்தை அனைவரும் அறிய, SHARE THIS.


