News April 2, 2025
என்னடா நடக்குது இங்க!

நடப்பு ஐபிஎல் தொடர் விசித்திரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய புள்ளிப்பட்டியலின்படி, முதல் 4 இடங்களில் இருக்கும் அணிகள் மொத்தமாக ஒரே ஒரு IPL கோப்பையை (GT) மட்டுமே வென்றிருக்கிறது. ஆனால், கடைசி 6 இடங்களில் இருக்கும் அணிகள் மொத்தமாக 15 கோப்பைகளை வென்றிருக்கின்றன. அதாவது, சூப்பர்ஸ்டார் அணிகள் அனைத்தும் இந்தமுறை வீழ்ச்சியை கண்டுள்ளன.
Similar News
News December 19, 2025
பாகிஸ்தான் தாதா CM நிதிஷ் குமாருக்கு மிரட்டல்

பிஹார் CM நிதிஷ்குமார் <<18575369>>பெண் டாக்டரின்<<>> ஹிஜாப்பை இழுத்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் நிதிஷுக்கு எதிராக சில சமூக விரோதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் பாகிஸ்தானை சேர்ந்த தாதா ஷெஹ்சாத் பட்டி நிதிஷுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
சச்சின் பொன்மொழிகள்

*நான் என்னை எப்பொழுதும் மற்றொருவருடன் ஒப்பிட்டதில்லை. *எதிரி யாராக இருந்தால் என்ன? முதலில் மோதிப்பார். *உங்கள் கனவுகளை பின்தொடருங்கள். ஆனால், குறுக்கு வழியில் இல்லை என்பதை உறுதி செய்யுங்கள். *அனைத்து துறைகளிலும் உயர்வு தாழ்வு இருக்கும். முயற்சியை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள். *தேடல் முடிந்ததும்தான் தேவையை அறிவாய். *துரோகத்தை அன்பினால் வெல்லுங்கள்.
News December 19, 2025
யூடியூப்பில் வெளியாகும் H ராஜாவின் ‘கந்தன்மலை’

தமிழகத்தில் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் இப்போது விஸ்வரூப எடுத்துள்ளது. இதனிடையே திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து ‘கந்தன்மலை’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவின் மூத்த தலைவர் H ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ‘கந்தன்மலை’ படம் தாமரை யூடியூப் சேனலில் இன்று வெளியாக உள்ளதாக H ராஜா தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


