News December 5, 2024

PROBA-3 செயற்கைக்கோள்கள் என்ன செய்யும்?

image

சூரியனின் வெளிப்புற Corona பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள PROBA-3 Satellite துல்லியமான இலக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு பகுதிகள் உள்ளன. Coronagraph, Occulter. 150மீ இடைவெளியில், மெய்நிகர் செயற்கைக்கோளை போல இவை இரண்டும் வலம்வரும். செயற்கை சூரியக்கிரகணம் போல, Occulter சூரியனை மறைக்கும். இதனால் Coronagraph-க்கு சூரியனின் மேற்புறம் தெளிவாக தெரியும், படமும் துல்லியமாக கிடைக்கும்.

Similar News

News December 5, 2025

வீடு தேடி வரும் ஐயப்ப பிரசாதம்! எப்படி வாங்குவது?

image

வீட்டில் இருந்தே அரவணை பாயாசம் பெறுவதற்கான ஏற்பாட்டை சபரிமலையில் உள்ள தபால் அலுவலகம் செய்துள்ளது. வீட்டருகே உள்ள தபால் நிலையத்தில், இதற்கான பணத்தை கட்டினால், சில தினங்களில் பிரசாதம் வீடு தேடி வரும். ஒரு டின் அரவணை கொண்ட பிரசாத கிட்டை வாங்க ₹520 செலுத்த வேண்டும். இதில் நெய், அரவணை, மஞ்சள், குங்குமம், விபூதி & அர்ச்சனை பிரசாதம் இருக்கும். 4 டின்னுக்கு ₹960 & 10 டின்னுக்கு ₹1,760 செலுத்த வேண்டும்.

News December 5, 2025

அரசின் தனி அதிகார நோக்கமே காரணம்: ராகுல் காந்தி

image

நாடு முழுவதும் <<18476104>>இண்டிகோ<<>> விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் தனி அதிகார நோக்கமே காரணம் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஒவ்வொரு துறையிலும் மேட்ச் ஃபிக்ஸிங் செய்யாமல், நியாயமாக போட்டிகள் நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். விமான தாமதங்கள் போன்ற பிரச்னைகளுக்கான விலையை கொடுப்பது சாமானிய மக்களே என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News December 5, 2025

அலர்ட்.. 18 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

image

நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 1 மணி நேரத்திற்கு மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், செங்கை, சென்னை, காஞ்சி, குமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. உஷாரா இருங்க நண்பர்களே!

error: Content is protected !!