News February 15, 2025
jioCinema, Disney Hotstar அப்ளிகேஷன்கள் என்ன ஆகும்?

டிஸ்னி ஹாட்ஸ்டார், ஜியோ நிறுவனங்கள் ஒன்றிணைந்ததால், ஜியோ ஹாட்ஸ்டார் என்ற புதிய அப்ளிகேஷன் உருவாகியிருக்கிறது. இதனால், பழைய ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா அப்ளிகேஷன்கள் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. உங்கள் ஃபோனில் டிஸ்னி ஹாட்ஸ்டார் தானாக அப்டேட் ஆகியிருக்கும். அதேநேரம், நீங்கள் ஃபோனில் ஜியோ சினிமா வைத்திருந்தால், அதில் அவ்வப்போது ஜியோ ஹாட்ஸ்டாருக்கு மாறச் சொல்லும்.
Similar News
News January 21, 2026
திமுகவுக்கு எதிராக புதிய வியூகம்: சசிகலா

மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக் கொண்டிருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். இறுதிமூச்சு உள்ளவரை தீயசக்தி திமுகவை எதிர்ப்பதே தனது ஒரே நிலைப்பாடு எனக்கூறிய, MGR, ஜெ., வழியில் பயணிக்கின்ற சிங்கங்கள் அனைவரும் வாருங்கள், ஒன்றிணைந்து களம் காண்போம் என அழைப்புவிடுத்தார். மேலும், வைத்திலிங்கம் தாய் கழகம் என நினைத்துகொண்டு தீய கழகத்தில் இணைந்துள்ளதாகவும் விமர்சித்தார்.
News January 21, 2026
மனிதர்களால் முடியாததை பட்டாம்பூச்சி செய்கிறது

மனிதர்களின் கண்ணுக்கு தெரியாத UV ஒளியை பட்டாம்பூச்சிகளால் காணமுடியும். இவை உணவருந்துவதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் புற ஊதா (UV) ஒளியை பயன்படுத்துகின்றன. எந்த பூவில் அதிக தேன் இருக்கிறது என்பதை கண்டறிய UV ஒளியை பயன்படுத்துகின்றன. அத்துடன், இவற்றின் இறக்கைகளில் மற்ற உயிரினங்களுக்கு தெரியாத தனித்துவமான UV ஒளி இருக்கிறது. இதை வைத்து தனது துணை யார் என்பதை சரியாக கண்டறியவும் செய்கின்றன. SHARE.
News January 21, 2026
நடிகர் கமல் ராய் காலமானார்

மலையாள நடிகரும், நடிகை ஊர்வசியின் சகோதரருமான கமல் ராய் (54) மாரடைப்பால் சென்னையில் காலமானார். தமிழில் ‘புதுசா படிக்கிறேன் பாட்டு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், சாயுஜ்யம், கொல்லிலக்கம், மஞ்சு, கிங்கினி, கல்யாணசௌகாந்திகம், வச்சலம், ஷோபனம், தி கிங் மேக்கர் மற்றும் லீடர் உள்ளிட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


