News April 6, 2025
என்ன ஆகும் இந்திய பங்குச்சந்தைகள்?

டிரம்ப்பின் பொருளாதார முடிவுகளால் உலகம் முழுவதும் உள்ள பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் 1.5% சரிந்தது. ஆனால், இந்திய சந்தைகளில் வர்த்தகம் முடிந்தபின், அமெரிக்க சந்தைகள் 5% சரிவடைந்தன. அதன் தாக்கம், நாளை ( திங்கட்கிழமை) இந்திய சந்தைகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
Similar News
News April 7, 2025
முதலில் பேட்டிங் செய்கிறது RCB

முக்கியமான ஐபிஎல் போட்டியான இன்று, RCB அணியும் MI அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற MI அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பெங்களூரு அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்துள்ளார். உலகளவில் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட இரண்டு அணிகள் மோதுவதால், இன்றைய போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
News April 7, 2025
வாட்ஸ் அப் காலில் விரைவில் ம்யூட் வசதி

வாட்ஸ் அப் தனது பயனர்களுக்காக தொடர் அப்பேட்டுகளை அளித்து வருகிறது. அதன்படி, அழைப்பு மேற்கொள்கையில் ம்யூட் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வீடியோ கால் வருகையில், அழைப்பை ஏற்கும் முன்பு கேமராவை அணைக்கும் வசதியையும் அறிமுகப்படுத்த இருப்பதாக சொல்லப்படுகிறது. வீடியோ காலின்போது எமோஜி அனுப்பும் வசதியை பரிசோதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
News April 7, 2025
இந்தியாவிற்கு பெரும் ஆபத்து

இமய மலைப்பகுதிகளில் விரைவில் மிகப்பெரிய நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சமீபத்தில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, ஜப்பானில் 9 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்படலாம் என்று கணித்திருக்கும் அவர்கள், இந்தியாவிலும் அதைவிட அதிக பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று கணித்துள்ளனர்.