News May 7, 2025
இந்தியாவின் பதிலடி எப்படி இருக்கும்? (2/2)

இந்தியா-பாக் இடையே முழு அளவிலான போர் ஆபத்தானது. அதேநேரம், பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் பதிலடி கொடுத்தே ஆகவேண்டும். இந்நிலையில் 2-வது வழியையே PM மோடி தேர்ந்தெடுப்பார் எனத் தெரிகிறது. அதன்படி, பயங்கரவாத முகாம்களை அழிக்கும் துல்லிய தாக்குதல்கள், பாக்.,க்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகள், சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 26, 2025
விலை குறைந்தது.. மக்கள் நிம்மதி!

மழை, வரத்து குறைவால் கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது. மேட்டுப்பாளையம் சந்தையில் நேற்று ₹40-₹60-க்கு விற்பனையான கேரட் இன்று ₹25- ₹40-க்கும், நேற்று ₹60-₹70-க்கும் விற்பனையான பீட்ரூட் இன்று ₹30-₹40-க்கும் விற்பனையாகிறது. சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தக்காளி, முருங்கை உள்ளிட்ட காய்கறிகளின் விலை வரும் நாள்களில் குறையும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
News November 26, 2025
புள்ளிகள் பட்டியலில் சறுக்கிய இந்திய அணி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒயிட்வாஷ் ஆனதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி 5-வது இடத்திற்கு சறுக்கியுள்ளது. 9 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 4 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிரா என 48.15% புள்ளிகள் மட்டுமே எடுத்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள தென்னாப்பிரிக்கா, புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை தக்கவைத்துள்ளது. இந்தியா கோட்டைவிட்டது எங்கே?
News November 26, 2025
கவர்னர் திமிரை அடக்கணும்: CM ஸ்டாலின்

அமைதிப்பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என கவர்னர் திமிரெடுத்து பேசியிருப்பதாக CM ஸ்டாலின் சாடியுள்ளார். கவர்னரின் திமிரை அடக்க வேண்டும் என்ற அவர், தீவிரவாத தாக்குதலில் மக்கள் பலியாவதை தடுக்கமுடியாத பாஜக ஆட்சியை அவர் புகழ்ந்து பேசுவதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், தமிழர்களை தேசவிரோதிகள் என சித்தரிக்கும் கவர்னரின் பேச்சு கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


