News December 30, 2024
2024ல் நீங்க பார்த்த மொரட்டு Cringe காட்சி எது?

2024 முடிவதற்கு இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கு. இப்போ பேசுவோம். இந்த வருடத்தில் நீங்கள் பார்த்த படங்களில் உங்களை “என்னடா இது ரொம்ப cringeஆ இருக்கு” என நினைக்கவைத்த/ இல்லை கதற வைத்த திரைப்பட காட்சி எது? நம் ஊர் தமிழ் படங்கள் மட்டுமில்லை. பான் இந்தியா லெவலில் யோசிச்சி கமெண்ட் பண்ணுங்க மக்களே. எந்த காட்சி அதிக அளவில் மக்களை சோதித்துள்ளது என பார்ப்போம்.
Similar News
News March 10, 2026
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு… மக்களுக்கு அதிர்ச்சி

கடந்த தேர்தலில், 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி என்ற திமுகவின் வாக்குறுதி வரவேற்பை பெற்றது. இது திமுகவின் வெற்றிக்கும் உதவியது. இந்நிலையில், நேற்று திருச்சி திமுக மாநாட்டில், நகைக்கடன் தள்ளுபடி பற்றி மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிப்பு வெளியாகாதது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும், விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 10, 2026
திமுக கலக்கத்தில் உள்ளது: PM மோடி

NDA-வுக்கு TN மக்களிடம் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து திமுக கலக்கத்தில் உள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். நாளை திருச்சியில் நடக்கும் NDA மாநாட்டில் பங்கேற்பது பற்றி X-ல் குறிப்பிட்டுள்ள அவர், திமுகவின் மோசமான நிர்வாகம், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை மக்கள் கவனித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். அதன் காரணமாகவே NDA-வின் வளர்ச்சி கொள்கையுடன் மக்கள் தங்களை இணைத்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 10, 2026
வங்கதேசத்திற்கு 5,000 டன் டீசல் அனுப்பும் இந்தியா

வங்கதேசத்தில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியாவிடம் இருந்து அந்நாடு 5,000 டன் டீசலை பைப்லைன் மூலம் பெறவுள்ளது. ஆண்டுதோறும் 1,80,000 டன் டீசல் வழங்குவதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் உள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக தற்போது டீசல் வழங்கப்பட உள்ளதாம். போர் பதற்றங்களால் எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நேரத்தில், இந்தியாவிடம் இருந்து வங்கதேசம் டீசல் பெறுவது கவனிக்கத்தக்கது.


