News June 25, 2024
1892 சென்னை-மைசூர் ஒப்பந்தம் கூறுவதென்ன? (2/2)

அந்த ஒப்பந்தத்தின் அட்டவணை ‘A’-வில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் காவிரி, பாலாறு உள்ளிட்ட 15 முக்கிய ஆற்று நீர் பிரச்னைகளில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியின்றி, எவ்வித முடிவும் எடுக்கப்படக் கூடாது. குறிப்பாக, மேற்பகுதியில் உள்ள மாநிலங்கள், கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், புதிய அணைக்கட்டையோ அல்லது நீர் தடுப்பு கட்டுமானத்தையோ ஏற்படுத்தக் கூடாது.
Similar News
News December 1, 2025
சற்றுமுன்: விலை மொத்தம் ₹13,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹4 உயர்ந்து ₹196-க்கும், கிலோவுக்கு ₹4,000 உயர்ந்து ₹1,96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நவ.29-ம் தேதி (சனிக்கிழமை) வெள்ளி விலை ₹9000, டிசம்பர் மாதத்தில் முதல் நாளான இன்று ₹4000 என 2 நாள்களில் மொத்தம் ₹13,000 அதிகரித்துள்ளது.
News December 1, 2025
நெல்கொள்முதல் விவகாரம்: திமுக நோட்டீஸ்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்நிலையில், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத உயர்வு, 100 நாள் வேலை திட்ட நிதி விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க, திமுக எம்.பி., டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளார். மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெறும் SIR குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
News December 1, 2025
திருமாவுக்கு சீக்ரெட் அசைன்மெண்ட்: வானதி சாடல்

செங்கோட்டையனை பாஜக இயக்குவதாக கூறும் திருமாவுக்கு வானதி சீனிவாசன் கவுண்ட்டர் அட்டாக் கொடுத்துள்ளார். NDA கூட்டணியில் குழப்பம் விளைவிக்க வேண்டும், மக்கள் மத்தியில் தங்களை பலவீனமாக காட்டவேண்டும் என்றே திருமா அப்படி பேசுவதாக கூறிய அவர், இது அவருக்கு வழங்கப்பட்ட அசைன்மெண்ட் என கூறியுள்ளார். மேலும், மக்களிடம் அதிக வாக்குகள் வாங்கி, ஆட்சி அமைப்பது மட்டுமே எங்களுடைய அசைன்மெண்ட் என தெரிவித்துள்ளார்.


