News June 25, 2024
1892 சென்னை-மைசூர் ஒப்பந்தம் கூறுவதென்ன? (1/2)

1890இல் அன்றைய மைசூர் ராஜ்ஜியம் தமிழகத்திற்கான காவிரி & பாலாற்று நீரை தடுக்க முனைந்தது. இதனை சென்னை தலைமாகாண அரசு கடுமையாக எதிர்த்து போராடியது. இதையடுத்து, இரு அரசுகளுக்கும் இடையே ஆங்கிலேயர் மத்தியஸ்தத்தின் கீழ், 1892இல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆற்று நீர் தகராறு தொடர்பான சட்டங்களுக்கு முன்னோடி என இந்த சென்னை-மைசூர் ஒப்பந்தத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Similar News
News January 24, 2026
இந்த வித்தியாசமான Diet குறித்து உங்களுக்கு தெரியுமா?

OMAD டயட் என்பதன் விரிவாக்கம் ‘One Meal A Day’. ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே உண்பார்கள். அதில் ஒரு நாளைக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் நிறைந்திருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு உணவிற்கு இடையில் 23 மணி நேரம் இடைவேளை இருக்கும். இது எடை குறைப்புக்கு உதவுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதில் பல ஆபத்துகளும் உள்ளன. இந்த டயட்டை மேற்கொள்வதற்கு முன் டாக்டரை அணுக வேண்டும். SHARE.
News January 24, 2026
மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. மகிழ்ச்சி செய்தி

CM ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று பள்ளிக் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தும் திருத்தச் சட்ட மசோதா, பிச்சை எடுப்பதை தடுத்தல் உள்ளிட்ட 5 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், மகளிர் உரிமைத் தொகை உயர்வு பற்றிய அறிவிப்பும் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
News January 24, 2026
நீட் தேர்வுக்காக காலை வெட்டிக்கொண்ட நபர்

UP-ல், மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக சூரஜ் பாஸ்கர் என்பவர் விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார். தனது காலை அவரே வெட்டிக்கொண்டு, ரவுடிகள் தாக்கியது போல் நாடகமாடியுள்ளார். எப்படியாவது நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் கோட்டாவில் பாஸாகி விடலாம் என்ற எண்ணத்தில் அவர் காலை வெட்டியது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை ஹாஸ்பிடலில் போலீசார் சேர்த்தனர்.


