News August 18, 2025
நெகிழ்ச்சியில் CPR-ன் தாய் பகிர்ந்த விஷயம்..

துணை ஜனாதிபதி தேர்தலுக்காக NDA கூட்டணியின் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதற்கு, அவரது தாயார் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். முதல் துணை ஜனாதிபதியாக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பெயரைத்தான் தனது மகனுக்கு வைத்ததாகவும், இன்று அதே பதவியில் தனது மகன் அமரவிருக்கிறார் எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்த அவர் இதற்காக பாஜகவிற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 18, 2025
பாடகர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் புகார்!

பிரபல ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அவர்கள் நேரடியாக கேரள CM பினராயி விஜயன் மற்றும் அம்மாநில DGP ஆகியோரிடம் அளித்திருக்கின்றனர். ஹிரன்தாஸ் முரளி என்ற வேடன் மீது ஏற்கெனவே பெண் டாக்டர் ஒருவர் தொடுத்த வழக்கில் அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த வழக்கில் அவர் கொடுத்த ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
News August 18, 2025
தேர்தல் ஆணையத்திற்கு CM ஸ்டாலின் சரமாரி கேள்வி..

வாக்கு திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்த நிலையில், மேலும் பல கேள்விகளை அடுக்கியுள்ளார் CM ஸ்டாலின். *வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்? *ஆதாரை ஆவணமாக ஏற்கத் தேர்தல் ஆணையத்தை தடுப்பது எது?*எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
News August 18, 2025
தவெக கொடிக்கு தடையில்லை.. ஐகோர்ட் தீர்ப்பு

விஜய்யின் தவெக கொடிக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுத்துள்ளது. தங்கள் கொடியை போல் இருக்கும் தவெக கொடிக்கு தடை விதிக்க கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை வழக்குத் தொடுத்தது. இதை விசாரித்த ஐகோர்ட், இரு கொடிகளையும் ஒப்பிடுகையில் TVK கொடி முற்றிலும் வேறுபாடானது; TVK கொடியில் மஞ்சள் நிறத்தில் யானை, வாகை மலர், 28 நட்சத்திரங்கள் உள்ளதால் மக்களிடம் எந்த குழப்பமும் இல்லை என தெரிவித்துள்ளது.