News October 19, 2024
என்ன அக்கா ஏன் இவ்வளவு கோபம்: உதயநிதி

இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருவதாக தமிழிசையை உதயநிதி சாடியுள்ளார். மக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும். நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் -ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது. இந்திக்கு அக்கா வக்காலத்து வாங்குவதை மக்கள் பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் பதிலடி கொடுத்துள்ளார்.
Similar News
News July 5, 2025
ரிதன்யா மரணம் வெறும் தற்கொலை அல்ல: சீமான்

இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி, தற்கொலை செய்ய வைத்த திட்டமிட்ட படுகொலை இது. இந்த நூற்றாண்டிலும் வரதட்சணை கொடுமையால் பெண்கள் உயிரிழப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என ரிதன்யா தற்கொலை குறித்து பேசியுள்ளார் நாதகவின் சீமான். அரசியல் அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு காரணமான கணவர், மாமனார், மாமியார் மீது எளிதில் ஜாமினில் வெளிவரும் வகையில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என சீமான் சாடியுள்ளார்.
News July 5, 2025
எடுத்த காரியத்தில் வெற்றி பெற…

எந்த விஷயத்திலும் வெற்றி பெற, அனுமனின் அனுக்கிரகம் வேண்டும். சனிக்கிழமை மட்டுமின்றி, தினமும் 21 முறை இந்த அனுமன் ஸ்லோகத்தை சொல்லி வாருங்கள்.
ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமத் பவ
ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே.
அர்த்தம்: ‘ராமனின் தூதனாகிய, மிகுந்த வீரமுள்ள, ருத்ரனின் சக்தியுடன் பிறந்த, ஆஞ்சநேயரே, வாயு புத்திரனே, உமக்கு வணக்கம்.
News July 5, 2025
வேலைவாய்ப்பு இலக்கை முந்தி TNPSC சாதனை..

ஜனவரி 2026-க்குள் 17,595 காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், ஜூன் 2024 முதல் ஜூன் 2025 வரை 17,702 இளைஞர்களை தேர்வு செய்துள்ளது. இதன்மூலம், 7 மாதங்களுக்கு முன்பாகவே நிர்ணயித்த இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது TNPSC. மேலும் கூடுதலாக 2500+ இடங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அது 2026 ஜனவரிக்குள் நிரப்பப்படும் எனவும் TNPSC அறிவித்துள்ளது.