News December 15, 2024
என்ன சார்? வித்தையெல்லாம் காட்டுறீங்க!

நடப்பு BGT தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அதில், ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங் ஸ்டைல் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. பும்ரா வீசிய பந்தை ஸ்மித் அடிக்காமல் விட்டுவிட, அது கீப்பரின் கைகளில் தஞ்சம் புகுந்தது. அப்போது ஸ்மித்தின் உடல் மொழியை சைடு கேமரா பதிவு செய்துள்ளது. அவர் பேட்டிங்கில் எப்படி வித்தை காட்டுறார் பாருங்க.
Similar News
News August 29, 2025
IMF நிர்வாக இயக்குநராகிறார் உர்ஜித் படேல்

சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நிர்வாக இயக்குநராக, RBI ex கவர்னர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு இவர் இப்பதவியில் நீடிப்பார். 2016 – 2018 வரை RBI ஆளுநராக படேல் செயல்பட்டார். பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இவரது பதவிக் காலத்தில் மத்திய அரசிற்கும், ரிசர்வ் வங்கிக்கும் மோதல் போக்கு நிலவியது குறிப்பிடத்தக்கது.
News August 29, 2025
IND – JPN இணைந்தால் புதிய தொழில்புரட்சி: PM நம்பிக்கை

ஜப்பானின் தொழில்நுட்பமும், இந்தியாவின் திறமையும் இணைந்து புதிய தொழில் புரட்சியை ஏற்படுத்த முடியும் என PM மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2 நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள மோடி, மெட்ரோ முதல் செமி கண்டக்டர் வரை இந்தியாவும், ஜப்பானும் நெருங்கிய ஒத்துழைப்பை கொண்டுள்ளதாகவும், ஜப்பானின் ஒத்துழைப்புடன் மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் பணிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.
News August 29, 2025
மகளிருக்கு ₹5,000 மானியம்… தமிழக அரசு அறிவிப்பு

மகளிர் வணிக ரீதியிலான <<17552261>>கிரைண்டர் வாங்க<<>> தமிழக அரசு ₹5,000 மானியம் வழங்கி வருகிறது. 25 வயதிற்கு மேல் உள்ள மகளிருக்கே இந்த திட்டம் பொருந்தும். கைம்பெண், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆண்டு வருமானம் ₹1.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியான பெண்கள் வரும் செப்.1-ம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொண்டு மானியம் பெறலாம். SHARE IT.