News October 18, 2025

தனியா இருக்கப்போ மாரடைப்பு வந்தால் என்ன செய்யணும்?

image

➤வீட்டில் தனியாக இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக 108-க்கு அழைத்து, உங்களுக்கு இருக்கும் அறிகுறிகளை சொல்லுங்கள் ➤அருகிலுள்ள நண்பர் (அ) பக்கத்து வீட்டாரை உடனடியாக அழைக்கவும் ➤நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். பதற்றம் வேண்டாம் ➤இருக்கையில் சாய்ந்து, நேராக அமருங்கள் ➤எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ வேண்டாம் ➤இறுக்கமான உடைகளை அணிந்திருக்க வேண்டாம். உயிர்காக்கும் இந்த தகவலை SHARE பண்ணலாமே.

Similar News

News October 18, 2025

சற்றுமுன்: விலை தாறுமாறாக மாறியது

image

தீபாவளியையொட்டி, கோயம்பேடு, தோவாளை, மாட்டுத்தாவணி உள்ளிட்ட மலர்ச் சந்தைகளில் பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. 1 கிலோ மல்லிகைப்பூ ₹2,500, கனகாம்பரம் ₹2,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், முல்லை, காக்கரட்டான் ஆகியவை ₹1,500-க்கும், பிச்சி பூ ₹1,200-க்கும் விற்கப்படுகிறது. தீபாவளிக்கு பிறகே விலை சரியும் வணிகர்கள் கூறுகின்றனர். தங்கம் மட்டுமல்ல, பூக்கள் கூட வாங்க முடியாது போலயே..!

News October 18, 2025

இன்று தங்கம் வாங்க உகந்த நேரம் எது?

image

தீபாவளியின் தொடக்கத்தை குறிக்கும் தந்தேராஸ் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆயுர்வேத கடவுளான தன்வந்திரியை வழிபடும் இந்நாளில் தங்கம், வெள்ளி, பாத்திரங்கள் வாங்கினால் வீட்டில் செல்வம் தொடர்ந்து பெருகும் என்று நம்பப்படுகிறது. அதன்படி, இன்று நீங்கள் தங்கம் வாங்க விரும்பினால், இரவு 7.28 மணி முதல் 8.38 மணி வரை நகை வாங்குவது சிறப்பாகும். நீங்க எத்தனை சவரன் வாங்க போறீங்க?

News October 18, 2025

முதல் நாள் வசூலில் சாதனை படைத்த DUDE

image

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘DUDE’ படம் முதல் நாளில் ₹22 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கல்யாண கலாட்டாவாக வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், தியேட்டர்களில் இளம் ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். அதேபோல், ‘பைசன்’ நல்ல வரவேற்பையும், ‘டீசல்’ கலவையான விமர்சனத்தையும் பெற்று வருகிறது. நீங்க எந்த படம் பார்த்தீங்க?

error: Content is protected !!