News April 6, 2025
CSK என்ன செய்ய வேண்டும்?

CSK அணியின் தொடர் தோல்வி அதன் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரம், தன் பக்கம் இருக்கும் பிரச்னைகளை CSK ஆய்வு செய்ய வேண்டிய நேரமிது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இளம் வீரர்களை அணியில் சேர்க்காதது, அதிக எண்ணிக்கையிலான ஸ்பின்னர்களை கொண்டிருப்பது, ஹிட்டர்கள் யாரும் இல்லாதது என வீக்னஸ் பட்டியல் நீள்கிறது. CSK சரி செய்ய வேண்டிய தவறுகள் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
Similar News
News October 21, 2025
பாகிஸ்தான் அணிக்கு புதிய ODI கேப்டன்

பாகிஸ்தான் அணியின் ODI கேப்டன் பதவியில் இருந்து முகமது ரிஸ்வான் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷயின் ஷா அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். தெ.அப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் அவர் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஸ்வான் தலைமையில் தொடர் தோல்விகளை பாகிஸ்தான் சந்தித்ததால் இந்த திடீர் மாற்றம் நடைபெற்றுள்ளது.
News October 21, 2025
பிஹார் தேர்தலில் இருந்து பின்வாங்கிய ஹேமந்த் சோரன்

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், RJD-யுடன் இணைந்து ஜார்கண்ட் CM ஹேமந்த் சோரனின் முக்தி மோச்சா கட்சி இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தொகுதி பங்கீடு சரியாக அமையாததால், தனித்து 6 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக ஹேமந்த் சோரன் அறிவித்திருந்தார். இந்நிலையில் பிஹார் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சி சார்ப்பில் திடீரென அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News October 21, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 21, ஐப்பசி 4 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 8:00 AM – 9:00 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்:9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: அமாவாசை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை