News May 2, 2024
தேசிய கட்சியாக என்ன தகுதி வேண்டும்?

1) ஒருகட்சி தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற எம்.பி தேர்தலில் 2% இடங்களில் (11 தொகுதிகள்) வெற்றிபெற வேண்டும். இதனை 3 வெவ்வேறு மாநிலங்களில் பெற வேண்டும். 2) 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் 6% வாக்குகளோடு 4 எம்பிக்களை பெற வேண்டும். 3) 4 மாநிலங்களில் அக்கட்சி மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த 3 நிபந்தனைகளில் ஒன்றைப் பூர்த்தி செய்தால் அக்கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கப்படும்.
Similar News
News January 29, 2026
அஜித் பவார் இடத்தை பிடிக்கப் போவது யார்?

தேசியவாத காங்கிரஸில் இருந்து பிரிந்து, பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வர் ஆனவர் அஜித் பவார். எனினும் மீண்டும் சரத் பவாருடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் சமீபத்தில் எழுந்தன. இந்நிலையில் எதிர்பாரா விதமாக அஜித் பவாரின் திடீர் மரணம் அக்கட்சியில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவி ரேஸில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை வலது பக்கம் Swipe செய்து பாருங்க..
News January 29, 2026
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் இன்று(ஜன.29) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மஸ்தான் சாஹிப் தர்கா (பெரிய பள்ளிவாசல்) கந்தூரி விழாவையொட்டி, நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள், முன்பருவத் தேர்வுகள் இருந்தால், அவை திட்டமிட்டபடி நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்ய பிப்.7 (சனிக்கிழமை) வேலை நாளாகும்.
News January 29, 2026
காலையில் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்

காலை நேரம் ஒரு நாளை முழுமையாக நமக்கானதாக மாற்றும் முக்கியமான பகுதி. அந்த நேரத்தில் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். சில பழக்கங்களுடன் தொடங்கும் நாள், தெளிவையும் உற்சாகத்தையும் தரும். காலை நேரத்தை நம்மை நாமே புரிந்து கொள்ளவும், நாளுக்கான தயார் நிலையில் இருக்கவும் பயன்படுத்தினால் வாழ்க்கை சரியான பாதையில் செல்லும். என்னென்ன செய்யலாம் என மேலே உள்ள போட்டோஸை ஸ்வைப் செய்து பாருங்க.


