News August 17, 2024
குருவின் அருளை பெற என்ன செய்ய வேண்டும்?

குருவுக்கு உகந்த நாளாகிய வியாழக்கிழமையில் நீராடி, விரதம் இருந்து பரிகாரம் செய்தால் குருவின் அருள் கிடைக்கும் என்கிறார்கள் முன்னோர்கள். குருவுக்கு மஞ்சள் நிற ஆடை ஏற்றது என்பதால், அந்த நிறத்தில் ஆடை அணிந்து முல்லை மலர்கள் கொண்டு குரு பகவானை அலங்கரிக்க வேண்டும் என்றும், கடலை பொடி சாதம், வேர்க்கடலை சுண்டல், இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம் எனவும் கூறுகிறார்கள்.
Similar News
News November 21, 2025
தி.மலை: அமைச்சர் அன்பில் மகேஷுக்கு உற்சாக வரவேற்பு!

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று (நவ.21) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை வருகை புரிந்தார். இவரை, தமிழ்நாடு பொதுப்பணித்துறை & நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். உடன் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
News November 21, 2025
இளையராஜா போட்டோக்களை பயன்படுத்த தடை

இளையராஜாவின் புகைப்படங்களை SM-ல் பயன்படுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்கள் மற்றும் மியூசிக் நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனது பெயர், புகைப்படம், இசைஞானி என்ற பட்டம் என எதையும் பயன்படுத்தக்கூடாது என்ற இளையராஜாவின் முறையீடு ஏற்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
Sports Roundup: கால்பந்து தரவரிசையில் இந்தியா சறுக்கல்

*சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்தியா 142-வது இடத்திற்கு சறுக்கல். * நவ.27-ம் தேதி நடைபெறவுள்ள WPL கிரிக்கெட் ஏலத்திற்கு 277 வீராங்கனைகள் பதிவு. *ஆஷஸ் வரலாற்றில் 100 விக்கெட்கள் வீழ்த்திய முதல் இடது கை பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஸ்டார்க் பெற்றுள்ளார். *டி20-ல் 19 முறை ஆட்டநாயகன் விருது வென்று சிகந்தர் ராசா சாதனை. *ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் பிரிவில், லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்


