News March 27, 2025
ராகுல் சொல்வதில் உண்மையில்லை: பாஜக MP

ராகுல் நாட்டிற்கு தவறான தகவலை தருகிறார் என பாஜக MP ஜெகதாம்பிகா பால் சாடியுள்ளார். அவையில் தன்னை பேச அனுமதிப்பதே இல்லை என ராகுல் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அவரை பேசக்கூடாது என ஒருவரும் தடுப்பதில்லை என ஜெகதாம்பிகா விளக்கமளித்துள்ளார். நாடாளுமன்ற செயல்பாடுகள் மீது ராகுல் ஈடுபாடு காட்டுவதில்லை. பிற காங்கிரஸ் MPக்கள் பேசும்போது, அவரால் மட்டும் ஏன் பேச முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News March 30, 2025
IPL: டாஸ் வென்ற SRH பேட்டிங்

DC vs SRH அணிகள் விசாகப்பட்டினத்தில் சற்று நேரத்தில் மோத உள்ளன. இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள SRH, ஒன்றில் வென்றுள்ளது. DC ஒரு போட்டியில் விளையாடி அதில் வெற்றி பெற்றது. முன்னதாக 2 அணிகளும் மோதிய 24 ஆட்டங்களில் SRH 13, DC 11 ஆட்டங்களில் வென்றுள்ளன. விசாகப்பட்டினம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் ரன்மழையும் பொழியும் என எதிர்பார்க்கலாம். யார் வெற்றி பெற போறாங்க?
News March 30, 2025
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: IMD

கோவை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வரும் 2ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் 3ஆம் தேதி கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், 1ஆம் தேதி முதல் ஏப்.3 வரை 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் எனவும், சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கணித்துள்ளது.
News March 30, 2025
‘PM Internship’ விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

‘PM இன்டர்ன்ஷிப்’ திட்டத்தின் 2ஆம் கட்ட பயிற்சிக்கு விண்ணப்பிக்க நாளை(மார்ச் 31) கடைசி நாள் ஆகும். SSLC, ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த 21 – 24 வயது உள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். பயிற்சிக்கு <