News May 18, 2024

மழை பெய்யும் போது செய்யக்கூடாதவை

image

கோடை மழை மின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யும் போது பொதுமக்கள் யாரும் மின் கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளைத் தொடக்கூடாது. மின் கம்பங்களில் கால்நடைகளைக் கட்டக் கூடாது என்றும், மின் தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News August 20, 2025

பொது அறிவு வினா- விடை

image

1. காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ?
2. இஸ்ரோ எப்போது நிறுவப்பட்டது?
3. தமிழகத்தில் வெற்றிலைக்கு புகழ் பெயர் ஊர்?
4. பிஹு எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
5. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு 21 வயதிலேயே கேப்டனானவர் யார்?
சரியான பதிலை கமெண்ட் பண்ணுங்க.. பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியிடப்படும்.

News August 20, 2025

தவெக மாநாடு: விஜய் ரசிகர் மரணம்

image

தவெகவின் 2-வது மாநாடு நாளை மதுரையில் நடக்கவிருக்கும் நிலையில், கட்சி தொண்டர்கள் பல இடங்களிலும் பேனர் வைத்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த இனாம் கரிசல்குளம் என்ற கிராமத்தில் பேனர் வைக்க முயன்ற காளீஸ்வரன்(19) இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இவர், தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 20, 2025

FASTag வருடாந்திர பாஸ்: லிஸ்டில் தமிழ்நாடு தான் 1st!

image

நாடு முழுவதும் ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி பயணம் செய்யும் <<17410889>>FASTag திட்டம்<<>>, ஆக.15-ல் அமலுக்கு வந்தது. முதல் நாளிலேயே இதற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், 4 நாள்களில் மொத்தம் 5 லட்சம் பேர் இதனை வாங்கியுள்ளதாகவும், Fastag வாங்கியவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் அதிகம் எனவும் தெரியவந்துள்ளது. FASTag-ஐ வாங்குவதற்கு Rajmarg Yatra செயலியை டவுன்லோடு செய்யுங்கள். SHARE IT.

error: Content is protected !!