News August 28, 2025

நடிகர் அஜித் எடுக்கப்போகும் புது அவதாரம்?

image

FANBOY அடைமொழியோடு தங்களது புகழ்பாடிகளையே பெரும்பாலான ஹீரோஸ் டைரக்டர்களாக நியமித்து வருகின்றனர். GBU படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், தன்னுடைய அடுத்த பட டைரக்டர் ஆதிக் தான் என அஜித் உறுதியாக இருக்கிறாராம். ஆனால், இந்த கூட்டணிக்கு தயாரிப்பாளர்தான் கிடைக்கவில்லை. நான்கைந்து கம்பெனிகள் இந்த கூட்டணியை நிராகரித்துவிட்டதால், Production House ஆரம்பிக்க அஜித் யோசிப்பதாக கூறப்படுகிறது.

Similar News

News August 28, 2025

சரியான போட்டி.. ஜனநாயகன் Vs தி ராஜாசாப்

image

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம், ஏற்கெனவே ஜன.9 என ரிலீஸ் தேதியை குறித்துவிட்டது. பிரபாஸின் ‘தி ராஜாசாப்’ படமும் ஜன.9 அன்றே ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலிலே இப்படம் வெளியாகவிருந்த நிலையில், டிச.5-க்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில்தான் மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. இதனால் விஜய் படத்தின் தெலுங்கு மாநில வசூல் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. மாஸ் காட்டுமா ஜனநாயகன்?

News August 28, 2025

தங்கம் விலை தலைகீழாக மாறுகிறது

image

<<17539704>>1 சவரன்<<>> ஆபரணத் தங்கத்தின்(22 காரட்) விலை மீண்டும் ₹75,000-ஐ கடந்துள்ளது. தங்கத்தின் விலை உயர்வு கணிப்புப்படி, 2030-ஆம் ஆண்டில் ஒரு சவரன் இருமடங்காக அதிகரித்து ₹1.50 லட்சமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். போர் உள்ளிட்ட காரணங்களால் பாதுகாப்பான முதலீடாக தங்கம், வெள்ளி பார்க்கப்படுவதாகவும், பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கிக் குவிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

News August 28, 2025

பிச்சை எடுப்பதை தடை செய்யும் மசோதா நிறைவேற்றம்

image

பிச்சை எடுப்பதை தடை செய்யும் மசோதா 2025, மிசோரம் சட்டமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இதன் மூலம் அரசு, NGO இணைந்து பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பிச்சைக்காரர்களை தங்க வைக்க மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளது. கடந்த 1972-லேயே தமிழகத்தில், அப்போதைய CM கருணாநிதியால் ‘பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்’ கொண்டுவரப்பட்டது.

error: Content is protected !!