News September 27, 2025
அபிமன்யு ஈஸ்வரன் என்ன தவறு செய்தார்?

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து அபிமன்யு ஈஸ்வரன் நீக்கப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. AUS, ENG-க்கு எதிரான டெஸ்ட் தொடர்களில், அவருக்கு பிளேயிங் 11-ல் ஒரு முறை கூட வாய்ப்பளிக்காமல் WI-க்கு எதிரான தொடரில் இருந்து நீக்கியது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். FC கிரிக்கெட்டில் 7,885 ரன்கள் அடித்த அவரை தேர்வுக்குழு அலட்சியப்படுத்துவதாகவும் ரசிகர்கள் சாடுகின்றனர்.
Similar News
News January 8, 2026
SPORTS 360°: வெற்றியுடன் தொடங்கிய பி.வி.சிந்து

*ஆஷஸ் தொடரில் 4-வது வெற்றியை ஆஸ்திரேலியா அணி நெருங்கியுள்ளது. *மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சீன தைபே வீராங்கனையை வீழ்த்தி, இந்தியாவின் பி.வி.சிந்து முதல் வெற்றியை பெற்றார். *தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆடவர் மற்றும் மகளிர் அணி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளனர். *தம்புல்லாவில் நடந்த டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை பாகிஸ்தான் வீழ்த்தியது.
News January 8, 2026
விஜய்யை மீண்டும் கூட்டணிக்கு அழைத்த தமிழிசை

அதிமுக – பாஜக கூட்டணியில் பாமகவை தொடர்ந்து இன்னும் பல கட்சிகள் இணைய உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். விஜய் NDA-வில் சேரும் போது தான் அசைக்க முடியாத சக்தியாக மாறுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், எப்படி NDA-வில் உள்ள கட்சிகளுக்கு திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு இருக்கிறதோ, அதே பொறுப்பு விஜய்க்கும் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
News January 8, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 8, மார்கழி 24 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்:6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: பஞ்சமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்


