News April 4, 2025
Y பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன?

தவெக தலைவர் <<15990697>>விஜய்க்கு Y பிரிவு<<>> பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. Y பிரிவு பாதுகாப்பு என்பது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் பிரபலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. கமாண்டோக்கள், போலீஸ் அதிகாரிகள் அடங்கிய 11 பேர் கொண்ட குழு, ஷிஃப்ட் அடிப்படையில் பாதுகாப்பு வழங்கும். அச்சுறுத்தல் இருப்பவர்களுக்கு அவர்களின் சொந்த மாநிலத்தில் மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும். SHARE IT
Similar News
News April 12, 2025
படு மோசமான செயல்.. தோனியை விமர்சித்த நடிகர்

தோனியின் பெயரை குறிப்பிடாமல் எக்ஸ் தளத்தில் கடுமையான விமர்சனங்களை நடிகர் விஷ்ணு விஷால் வைத்துள்ளார். அதில் “ஏன் இவ்வளவு கீழ் வரிசையில் இறங்க வேண்டும். எந்தவொரு விளையாட்டும் வெற்றி பெறுவதற்காக விளையாடப்படுவதில்லையா? இது இப்போது ஒரு சர்க்கஸை பார்ப்பது போல உள்ளது. எந்தவொரு தனிநபரும் விளையாட்டை விட பெரியவர் அல்ல” என்று தோனியை கடுமையாக சாடியுள்ளார்.
News April 12, 2025
அமைச்சருக்கு எதிராக ED-யிடம் வசமாக சிக்கிய ஆவணங்கள்

அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு மற்றும் அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ED அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர் பெறுவதற்கு லஞ்சம் வசூலித்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும், திட்டமிட்ட நோக்கங்களுக்காக பெருமளவில் ஹவாலா பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் ED தெரிவித்துள்ளது.
News April 12, 2025
அதிமுக கூட்டணியில் இருந்து விலக SDPI திட்டம் எனத் தகவல்!

அதிமுக கூட்டணியில் இருந்து விலக இந்திய சமூக ஜனநாயகக் கட்சி(SDPI) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூடா நட்பு கேடாய் முடியும் எனவும் பாஜகவுடன் கூட்டணி சேர அதிமுக என்ன காரணம் சொன்னாலும் அதனை TN மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் SDPI தலைவர் நெல்லை முபாரக் விமர்சித்துள்ளார். முன்னதாக நேற்று அவர் CM ஸ்டாலினை <<16063378>>சந்தித்து பேசியது<<>> கவனிக்கத்தக்கது.