News September 27, 2025
இன்று விஜய் பேசப்போவது என்ன?

இன்று நாமக்கல், கரூரில் விஜய் மக்கள் சந்திப்பை நடத்தவிருக்கிறார். தனது பரப்புரையின்போது, அந்தந்த மாவட்டங்களின் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விஜய் பேசுவது வழக்கம். அந்த வகையில், தற்போது அரசியலில் பரபரப்பாக பேசப்படும் கிட்னி திருட்டு விவகாரம் குறித்து நாமக்கல்லிலும், கரூரில் செந்தில் பாலாஜியை மையமாக வைத்தும் விஜய்யின் பேச்சு இருக்கும் என சொல்லப்படுகிறது.
Similar News
News September 27, 2025
BREAKING: தங்கம் விலை Record படைத்தது.. இது முதல்முறை

தங்கம் விலை மீண்டும் ₹85 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ₹90 உயர்ந்து ₹10,640-க்கும், 1 சவரனுக்கு ₹720 உயர்ந்து ₹85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரூபாய் மதிப்பு உயர்வால் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் அதிகரித்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News September 27, 2025
இந்திய அணிக்கு ஷாக்.. ஹர்திக் & அபிஷேக் காயம்!

Pak-க்கு எதிரான இறுதி போட்டிக்கு முன், ஹர்திக் & அபிஷேக் சர்மா ஆகியோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இலங்கை மேட்ச்சில் முதல் ஓவரை வீசிய கையோடு மைதானத்தில் இருந்து வெளியேறினார் ஹர்திக். அதே போல, அபிஷேக், 9.2 ஓவர்கள் பீல்டிங் செய்து விட்டு வெளியேறினார். அபிஷேக் நலமுடன் இருப்பதாக பவுலிங் கோச் மோர்கல் தெரிவித்த நிலையில், ஹர்திக்கின் நிலை குறித்து இன்று முடிவெடுக்கப்படும் எனவும் கூறினார்.
News September 27, 2025
Google-க்கு இன்று 27-வது பர்த்டே!

1998-ம் ஆண்டு US-ல் ஒரு Garage-ல் தொடங்கப்பட்டு, இன்று உலகின் அட்ரஸாக மாறியிருக்கும் Google-க்கு இன்று 27-வது பர்த்டே. ‘என்ன வேணும் உனக்கு.. கொட்டி கொட்டி கெடக்கு’ என Google-ளிடம் பதில் இல்லாத விஷயமே கிடையாது. ஆபிஸ் வேலையில் இருந்து, ட்ரிப் போறது, Girlfriend-க்கு கிப்ட் வாங்கி கொடுப்பது என எந்த ஒரு குழப்பத்திற்கும் ஈசியான விடையை Google-ல் கண்டுபிடிக்கலாம். நீங்க Google-ல் அதிகமாக என்ன தேடுவீங்க?