News February 16, 2025
மும்மொழிக் கொள்கை என்றால் என்ன?

நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை. அதாவது, தாய் மொழி, ஆங்கில மொழி & மூன்றாவதாக வேறு மாநில மொழி. இதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டு, பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலத்தவர் பெரும்பாலும் இந்தியை மூன்றாவது மொழியாக எடுத்து படிக்கின்றனர்.
Similar News
News January 12, 2026
அளவோ சிறியது, வலிமையோ பெரியது.. கொஞ்சம் பாருங்க

உயிரினங்களின் உலகம் ஏராளமான அதிசயங்கள் நிறைந்தவை. சிங்கம், புலி, யானை போன்ற பெரிய விலங்குகள் இருந்தாலும், இயற்கையின் படைப்பில் சில சிறிய அளவிலான பூச்சிகள் கூட வாயை பிளக்க வைக்கும் வலிமை கொண்டவையாக உள்ளன. அந்த வகையில் என்னென்ன உயிரினங்கள், நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News January 12, 2026
ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை: அமைச்சர் ராஜகண்ணப்பன்

அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டதால், ராமதாஸ் தரப்பு திமுகவில் அங்கம் வகிக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், ராமதாஸ் & ஜான் பாண்டியன் (தமமுக) உடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் பரபரப்பு தகவலை கூறியுள்ளார். இம்மாத இறுதிக்குள் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உறுதியாகிறதா திமுக – பாமக கூட்டணி?
News January 11, 2026
பாக்., ராணுவத்துக்கு தொடர்பு: ஒப்புக்கொண்ட பயங்கரவாதி

பாகிஸ்தான் இராணுவத்திற்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதை பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஒப்புக்கொண்டுள்ளான். ஆம்! சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவுக்கு எதிராக பேசிய லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணை தலைவரான ஷைபுல்லா கசூரி, பாக்., ராணுவம் தங்களின் வீரர்களின் இறுதிச் சடங்கு பிரார்த்தனைகளை செய்ய தன்னை அழைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளான்.


