News April 24, 2025
சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன?

1971 போரை நிறுத்தும் வகையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே <<16202618>>சிம்லா ஒப்பந்தம்<<>> போடப்பட்டது. இரு நாடுகளும் எல்லை விவகாரங்களில் அமைதியான முறையில் பேச்சுவார்த்தையில் தீர்வு காண வேண்டும் என்பதே சிம்லா ஒப்பந்தம். அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், பாகிஸ்தானின் அதிபர் ஜுல்பிகர் அலி பூட்டோ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
Similar News
News April 24, 2025
நாளையும் வெயில் கொளுத்தும் .. வெளியே வராதீங்க

வெயிலின் தாக்கத்தால் மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று கரூர், திருச்சி, மதுரை, ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104.36 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. நாளையும் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், காலை 11 முதல் மதியம் 3 மணி வரை மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 24, 2025
முதலில் ஏவுகணை.. இப்போது விமானப்படை..!

இந்தியா- பாக். இடையே போர் தொடங்கும் சூழல் நிலவிவரும் நிலையில், ரஃபேல், சுகோய்- 30 ஆகிய போர் விமானங்களில் இந்திய விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ‘ஆக்ரமன்’ என்ற பெயரில் இந்த பயிற்சியை வீரர்கள் செய்து வருகின்றனர். ஏற்கனவே ஏவுகணை வீசி சோதனை செய்த நிலையில், இப்போது விமானப்படையும் பயிற்சியில் ஈடுபடுகிறது. மறுபுறம், பாகிஸ்தானும் தனது எல்லைகளில் ராணுவத்தை குவித்து வருகிறது.
News April 24, 2025
பாகிஸ்தானிடம் சிக்கிய இந்தியர்கள் யார்?

இந்திய <<16203309>>படை வீரர் <<>>பாகிஸ்தானிடம் சிக்கிய நிலையில் ஏற்கனவே இந்திய வீரர்கள் சிக்கியதும் நினைவுபடுத்தப்படுகிறது. 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த போது, இந்திய கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கினார். 1999-ம் ஆண்டு கார்கில் போர் நடக்கும் போது இந்திய வீரர் நச்சிகேட்டா பாகிஸ்தானிடம் சிக்கினார். இருவரும் பல சித்திரவதைகளுக்கு பின் நாடு திரும்பினர்.