News June 27, 2024
திமுகவின் முடிவு என்ன?: அண்ணாமலை

செங்கோலை அகற்ற வேண்டும் என்ற கருத்துக்கு திமுக என்ன பதில் சொல்லப் போகிறது? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். INDIA கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் கருத்தை திமுக ஏற்கிறதா? என்ற அவர், செங்கோலை அகற்றும் முடிவை திமுக ஆதரிக்கிறதா? என்றும் வினவியுள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாதி எம்.பி ஆர்.கே.சௌத்ரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 2, 2026
தவெக – காங்கிரஸ் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை?

தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க காங்., முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராகுல் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ள நிலையில், ஆதவ்வும் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுவதால் இதுகுறித்த யூகங்கள் வலுத்துள்ளன. மேலும், இதுபற்றி காங்கிரஸாரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறதாம். அத்துடன் கூட்டணி பற்றிய முடிவை இன்று மாலைக்குள் சொல்லுமாறு காங்.,க்கு திமுக கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 2, 2026
விபத்தில் சிக்கிய தமிழ் நடிகை.. ஒருவர் உயிரிழப்பு

நடிகை தேவி பிரியா(44) கார் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியுள்ளது. பெரம்பலூர் அருகே கார் பஞ்சராகி நின்ற நிலையில், டிரைவர் முத்துகணேஷ் டயரை மாற்றிக் கொண்டிருந்துள்ளார். அப்போது பின்னால் இருந்து வேகமாக வந்த மற்றொரு வாகனம் மோதி, முத்துகணேஷ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். தேவி பிரியா காயமின்றி தப்பிய நிலையில், உதவியாளர் திவாகர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News March 2, 2026
1 ரூபாய் செலவில்லாமல் ₹7 லட்சம் கிடைக்கும்

ஒரு ரூபாய் கூட பிரீமியம் செலுத்தாமல் EPFO-வில் ஊழியர்கள் ₹7 லட்சம் வரை ஆயுள் காப்பீடு பெறலாம். பணியில் இருக்கும் ஊழியர் இறந்தால், அவரது குடும்பம் அல்லது நாமினி, ₹2.5 லட்சம் – ₹7 லட்சம் வரை காப்பீடு தொகையாக பெற முடியும். ஊழியரின் கடைசி 12 மாத சராசரி சம்பளத்தின் அடிப்படையில் காப்பீடு தொகை கணக்கிடப்படும். EPFO போர்ட்டலில் உள்ள “Death claim filing by beneficiary”-ல் இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE.


