News August 4, 2024
உற்பத்தி வளர்ச்சி சற்றே குறைந்ததற்கு காரணம் என்ன?

இந்தியாவின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி சற்றே குறைந்துள்ளதாக எஸ்&பி குளோபல் இந்தியா தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், கடந்த ஜூனில் 58.30 புள்ளிகளாக இருந்த அதன் பி.எம்.ஐ., குறியீடு 58.10ஆக குறைந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலோகம், ரசாயனம் உள்ளிட்ட 8 பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் புதிய ஆர்டர்கள் குறைந்ததன் காரணமாகவே இந்த சிறு சரிவு ஏற்பட்டிருக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Similar News
News December 4, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை
▶குறள் எண்: 539
▶குறள்:
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
▶பொருள்: மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.
News December 4, 2025
தோல்விக்கான காரணங்களை அடுக்கிய கே.எல்.ராகுல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ODI-ல் தோற்றதற்கு டாஸும் ஒரு முக்கிய காரணம் என்று கேப்டன் கே.எல்.ராகுல் கூறியுள்ளார். ஏனெனில், 2-வது இன்னிங்ஸில் பனிப்பொழிவின் காரணமாக பந்துவீசுவது மிகவும் கடினமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பந்துவீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்றும், பேட்டிங்கின் போது 20-25 ரன்கள் கூடுதலாக அடித்திருக்கலாம் எனவும் கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.
News December 4, 2025
திருப்பரங்குன்றம்.. திமுக அரசை சாடிய அண்ணாமலை

திருப்பரங்குன்றம் விஷயத்தில், கோர்ட் உத்தரவுகளை எல்லாம் ஒன்றுமில்லை என திமுக அரசு நினைக்கிறதா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் நூற்றுக்கணக்கான போலீஸை குவித்து, பக்தர்கள் மதச்சடங்கு செய்வதை திமுக அரசு தடுத்து நிறுத்தியுள்ளதாக அவர் சாடியுள்ளார். மேலும், தமிழகத்தில் சனாதன தர்மத்தை தனிமைப்படுத்துவதற்கான காரணத்தை திமுக அரசு கூறவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


