News February 15, 2025
போர்பன் வரி குறைப்புக்கு காரணம் என்ன?

ஸ்காட்ச் விஸ்கி ஸ்காட்லாந்தில் தயாரிக்கப்படுவது போல போர்பன் விஸ்கி அமெரிக்காவில் மட்டுமே தயாராகிறது. இதற்கு உலகம் முழுவதிலும் பல ரசிகர்கள் உள்ளனர். இதனை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய நேற்றுவரை 150% வரி இருந்தது. ஆனால், அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா அதிக வரி விதிக்கிறது என்ற டிரம்பின் குற்றச்சாட்டுக்குப் பிறகு, போர்பன் மீதான வரி 50%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 24, 2025
20 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி தீர்ப்பு (2/2)

தமிழகத்தை உலுக்கிய இந்த கொலை வழக்கில் ஓம் பிரகாஷ் உள்ளிட்ட 2 பேர் சிறையிலேயே இறந்துவிட்டனர். ஜாமினில் விடுதலையான 3 பெண்கள் தலைமறைவாகினர். 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் பிறகு ஒருவரை விடுதலை செய்த கோர்ட் 3 பேருக்கு இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவத்தை தழுவியே கார்த்தி நடிப்பில் 2017-ல் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
News November 24, 2025
வர்ணிக்க முடியாத கவிதை கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் என்றாலே, அவரது கியூட்டான முகபாவனைகள்தான் நினைவுக்கு வருகின்றன. வர்ணிக்க முடியாத கவிதை போல் அவரது முகபாவனைகள் நம்மை ரசிக்க வைக்கின்றன. அவர் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் பட புரமோஷனுக்காக நடத்திய போட்டோஷூட் படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அனைத்துமே அவரது ஸ்டைலில் ரசிக்கும்படி உள்ளது. உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News November 24, 2025
BREAKING: புதிய கட்சி.. OPS அறிவித்தார்

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, அதிமுக தொண்டர்கள் உரிமைக் கழகமாக மாறியுள்ளதாக OPS அறிவித்துள்ளார். 3 ஆண்டுகளாக கொடுத்த ஆதரவு, தியாக உணர்வு செயல்பாடுகளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக இணையாவிடில் தனிக்கட்சியாக உருவெடுப்போம் என OPS ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.


