News August 27, 2025
SK-ன் வெற்றிக்கு காரணம் என்ன? முருகதாஸ் விளக்கம்

கடந்த 15 வருடங்களில் தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்தவர்கள் என்றால் அனிருத், SK தான் என இயக்குநர் முருகதாஸ் தெரிவித்துள்ளார். இவர்களில் SK மக்களை அதிகளவில் கவர்ந்துவிட்டார் என்றும், மதராஸி படப்பிடிப்பின் போது, அவருக்காக கூடிய ரசிகர் கூட்டத்தை பார்த்து மிரண்டுவிட்டதாகவும் கூறினார். நிறைய திறமையான புதுமுக இயக்குநர்களுடன் அவர் பணியாற்றியதே SK-ன் வெற்றிக்கு காரணம் என்றார்.
Similar News
News August 27, 2025
நாளை அனைத்து பள்ளிகளுக்கும்.. அறிவிப்பு

நாளை (ஆக.28) அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து 100 மீ. சுற்றளவில் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்றால் போலீஸில் புகாரளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
அதிமுக கூட்டணியில் விஜய்: RB உதயகுமார் சொல்வதென்ன?

அதிமுக கூட்டணிக்கு தவெக வரவேண்டும் என ஆர்.பி உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார். திமுகவை வீழ்த்த நினைத்தால் விஜய் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டுமென்றார். திமுகவை வீழ்த்த கூடிய சக்தி அதிமுகவிற்கு தான் உள்ளது என டெல்லியில் உள்ள பாஜகவிற்கு தெரியும் போது, விஜய்க்கு ஏன் தெரியவில்லை என்றார். முதல்வராக வேண்டும் என்பதற்காக தவெக தொண்டர்களின் உழைப்பு, எதிர்பார்ப்பை விஜய் வீணடித்திட வேண்டாம் என்றார்.
News August 27, 2025
தமிழகத்தில் கவனத்தை ஈர்த்த விநாயகர்கள் PHOTOS

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டு அது பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவை என்னென்ன, எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதை மேலே போட்டோக்களில் கொடுத்துள்ளோம். Swipe செய்து பார்க்கவும்.