News March 26, 2024
தமிழிசையின் சொத்து மதிப்பு என்ன?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவில் தங்களது சொத்து மதிப்பை தாக்கல் செய்ய வேண்டும். அந்தவகையில், பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை செளந்தரராஜன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதில், ₹6.54 கோடிக்கு அசையும் சொத்துகள், 200 பவுன் தங்க நகைகள், ₹15 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் என மொத்தம் ₹21.54 கோடி மதிப்பு சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 19, 2025
வாரண்டி தொடர்பான வழக்கில் நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு

திருவாரூர் அருகே புலிவலத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் டிவி வாரண்டி தொடர்பாக 23.07.2024 அன்று தொடர்ந்த வழக்கில், திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் டிவி நிறுவனம் கார்த்திக்கு 45 நாட்களுக்குள் பழைய டிவியை எடுத்துக் கொண்டு புதிய டிவி (அ) டிவியின் விலையான ரூ.1,49,099 பணத்தை வழங்க வேண்டும். மேலும் நஷ்ட ஈடாக ரூ.1 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.10,000 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
News April 19, 2025
MBBS தமிழில் படிக்க நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை 5 ஆண்டுகளும் தமிழில் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதே சமயம் இதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதால், அது குறித்து தேசிய மருத்துவ கவுன்சிலுடன் ஆலோசிக்கப்படும் எனவும் கூறினார். தமிழகத்தில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
News April 19, 2025
அதிமுகவில் இணைந்த தவெக மாவட்ட பொறுப்பாளர்!

TVK ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் முள்ளிமுனை P.P.ராஜா அதிமுகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்களுடன் அதிமுக மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதனை, ADMK IT விங் பதிவிட்டுள்ளது. விஜய் கட்சி தொடங்கி இன்னும் தேர்தலையே சந்திக்காத நிலையில், அவரது கட்சியிலிருந்து சிலர் விலகுவதும், கட்சிப் பொறுப்புக்கு பணம் வாங்குவதாக புகார் கூறுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.