News April 16, 2024
RCB அணியில் என்னதான் பிரச்னை?

ஐபிஎல் தொடரில், தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் RCB அணிக்கு என்னதான் பிரச்னை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். டு பிளெஸிஸ் கேப்டன்சி, தரமான வெளிநாட்டு பவுலர்கள் (கேமரூன் க்ரீன், அல்ஸாரி ஜோசப், மேக்ஸ்வெல், வில் ஜாக்ஸ்), கோலி – டு பிளெஸிஸ் ஓப்பனிங், பினிஷர் தினேஷ் கார்த்திக் என அனைத்தும் இருந்தும் எப்படி தோல்வி அடைகிறது? என்ன மாற்றம் செய்தால் RCB அணி வெற்றி பெறும்? என கமெண்டில் சொல்லுங்க
Similar News
News April 29, 2025
ஏன் பயப்படுறீங்க சசி தரூர்? விளாசிய காங். தலைவர்

மோடியை புகழும் சந்தர்ப்பத்திற்காக சசி தரூர் காத்துக்கிடக்கிறார் என காங். தலைவர் உதித் ராஜ் விமர்சித்துள்ளார். பஹல்காம் தாக்குதலை அடுத்து, அரசின் பாதுகாப்பு செயல்பாடுகளை காங். உள்பட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், காங். MP சசி தரூர் மோடி அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இந்த நிலையில், ED, CBI, IT ஏஜென்சிகளை கண்டு சசி தரூர் பயப்படுகிறார் என உதித் ராஜ் விமர்சித்துள்ளார்.
News April 29, 2025
அமெரிக்காவின் துரோகம்: மார்க் கார்னி வெற்றிப் பேச்சு

அமெரிக்க துரோகத்தை கனடா மக்கள் ஒருபோதும் மறக்க வேண்டாம் என அந்நாட்டின் <<16252207>>PM <<>>மார்க் கார்னி கூறியுள்ளார். அதோடு, கனடாவை வலுவாக்க மக்கள் உத்தரவிட்டுள்ளனர் எனக் கூறிய PM, வரவுள்ள நாள்களும், மாதங்களும் மிகுந்த சவாலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். பெரும்பான்மையை நெருங்காவிடிலும், சிறு கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை அமைக்கும் நிலையில் லிபரல் கட்சி உள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
News April 29, 2025
இன்றுடன் சட்டப்பேரவை நிறைவடைந்தது..

சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். மார்ச் 14-ம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில், இலவச பட்டா விதிகளில் திருத்தம், கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன. ஆளும் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடைபெற்ற நிலையில், இன்றுடன் பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.