News February 17, 2025
மும்மொழிக் கொள்கையை ஏற்பதில் என்ன பிரச்னை?

TNல் புதிய கல்விக் கொள்கையை ஏற்பதில் என்ன பிரச்னை என இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆரம்பக் கல்வியில் தாய்மொழியை ஊக்குவிப்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று கூறிய அவர், கல்வியாளர்கள், வல்லுநர்களின் ஆலோசனைப்படியே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் புதிய கல்விக்கொள்கை மிகவும் அவசியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 1, 2026
விஜய் தான் ‘ஜனநாயகன்’ டைரக்டரா?

விஜய் ஒரு பக்கா டைரக்டர் என்று ஹெச்.விநோத் கூறியுள்ளார். ஒரு இயக்குநருக்கு தெரிய வேண்டியதைவிட அதிகமாகவே அவருக்கு தெரிந்திருப்பதாக ஹெச்.விநோத் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, பகவந்த் கேசரியை ரீமேக் செய்ய விஜய் விரும்பியதாக கோலிவுட்டில் பேசப்பட்டது. ஹெச்.விநோத்தும் அதை மறுக்காமல் இது தளபதி படம் என மழுப்பலாக பதிலளிக்கிறார். இதனால் ஜனநாயகன் டைரக்டர் விஜய் தானோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுகிறது.
News January 1, 2026
ஜனவரி 1: வரலாற்றில் இன்று

*1877–இந்திய பேரரசின் மகாராணியாக விக்டோரியா அறிவிப்பு *1951–நடிகர் நானா படேகர் பிறந்தநாள் *1971–நடிகர் கலாபவன் மணி பிறந்தநாள் *1971–அரசியல்வாதி ஜோதிர் ஆதித்யா சிந்தியா பிறந்தநாள் *1975–நடிகை சோனாலி பிந்த்ரே பிறந்தநாள் *1978–துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா 855 போயிங் 747 விமானம் வெடித்ததில் 213 பயணிகள் உயிரிழப்பு *1979–நடிகை வித்யா பாலன் பிறந்தநாள் *1995–உலக வர்த்தக அமைப்பு உருவாக்கம்
News January 1, 2026
சிலிண்டர் விலை உயர்வு!

சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹110 ஏற்றப்பட்டு சென்னையில் ₹1,849.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் (14.2 கிலோ எடை) விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ₹868.50 ஆக தொடர்கிறது.


