News April 29, 2024
நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, நேற்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். ஒரு படத்திற்கு, ₹3 முதல் ₹4 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கு அவரது தற்போதைய நிகர சொத்து மதிப்பு, ₹110 கோடி என கூறப்படுகிறது.
Similar News
News January 26, 2026
நேதாஜி பொன்மொழிகள்

*வெறும் அரசியல் சுதந்திரத்தால் தேசம் திருப்தி அடையாது. *வெற்றி தோல்வி முக்கியமில்லை, துணிந்து சண்டையிடுவதுதான் முக்கியம். *கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள். *முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன். *உண்மையும் நேர்மையும் உள்ளவனாக இருந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக வாழலாம்.
News January 26, 2026
தேர்தலை குறிவைத்து பத்ம விருதுகள்: கார்த்தி சிதம்பரம்

இந்தாண்டுக்கான பத்மவிருதுகளை மத்திய அரசு அறிவித்த நிலையில் அதனை காங்., MP கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். தனது X-ல் அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை இருந்திருந்தால், பத்மவிருது பெறுபவர்களைத் தேர்ந்தெடுப்பது அரசுக்கு மிகவும் சிக்கலானதாக இருந்திருக்கும் என்றும், ஆனால் இப்போது அது மிகவும் எளிது; தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்தால் போதும் எனவும் கூறியுள்ளார்.
News January 26, 2026
ஒரு யூனிட் மின்சாரம் ₹3.50-க்கு கிடைக்க வாய்ப்பு!

மகாராஷ்டிராவில் 2 தோரியம் அடிப்படையிலான மின் நிலையங்களை மத்திய அரசு அமைக்க உள்ளது. உலகளவில் யுரேனியம் மூலம் அதிக மின்சாரம் பெறப்படும் நிலையில், தோரியம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும். மேலும் ஒரு யூனிட்டுக்கு ₹3.50 என்ற குறைந்த விலையில் மின்சாரம் இனி கிடைக்கும். TN-ல் தற்போது பயன்பாட்டை பொறுத்து ஒரு யூனிட்டுக்கு ₹4.95 – ₹12 வரை கட்டணம் விதிக்கப்படுகிறது.


