News November 23, 2024
மகாராஷ்டிரா தேர்தலின் மேஜிக் நம்பர் எத்தனை?

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 145 இடங்களை வெல்லும் கூட்டணி ஆட்சி அமைக்கும். மஹாயுதி கூட்டணியில் பாஜக 148, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 80, அஜித் பவார் NCP 53 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மஹாவிகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் 103, சிவசேனா UBT 89, சரத் பவார் NCP 87 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன. Stay tuned with Way2News for live election updates..
Similar News
News November 29, 2025
ராசி பலன்கள் (29.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 28, 2025
TVK-வில் Ex அமைச்சர்கள் இணையவுள்ளனர்: KAS

முதல்வராகவும், பொதுச்செயலாளராகவும் முன்மொழிந்த தன்னை, EPS அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியதாக செங்கோட்டையன் சாடியுள்ளார். மேலும் EPS தலைமையில் ஒரு தேர்தலிலாவது அதிமுக வெற்றி பெற்றதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். டிசம்பரில் தவெக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமையும் என்றும், இன்னும் சில Ex அமைச்சர்களும் விஜய்யுடன் இணைவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
News November 28, 2025
பூத் ஏஜெண்டுகள்.. விஜய் முக்கிய உத்தரவு

தவெக பூத் ஏஜெண்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். பூத் ஏஜெண்டுகளுக்கான விண்ணப்பங்களை விரைவில் பூர்த்தி செய்து தலைமைக்கு அனுப்பி வைக்குமாறு தவெக தரப்பில் இருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு பறந்துள்ளது. ஒவ்வொரு பூத்திற்கும் ஒரு ஏஜெண்டு என்ற எண்ணிக்கையை 10-ஆக உயர்த்த தவெக அண்மையில் அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில், பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.


